பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாசிகம்

370

வாமனார்


வாசிகம் = சொல்லால் செய்யும்செயல், செய்தி, தூது
வாசிகை = கோத்த மாலை
வாசிப்பாடு = பெருமை
வாசினை = வாசித்தல்
வாச்சல்யம் = தயை
வாச்சியம் = சொல்லால் பெறும் பொருள், நிந்தை, சொல்லல்
வாஞ்சை = ஆசை, விருப்பம்
வாடாமாலை = பொன்னரிமாலை
வாடி = வேலி, மதில்
வாடை = இடைச்சேரி, மணம், வடகாற்று, வரிசை
வாட்டு = பொரியல்
வாணம் = தீ, அம்பு
வாணன் = வகிப்பவன்
வாணாள் = வாழ்நாள்
வாணி = கூத்து, சொல், அம்பு, சரஸ்வதி
வாணிகம் = இலாபம், வியாபாரம்
வாணிகன் = வியாபாரி, துலாராசி
வாணிகேள்வன் = பிரமன்
வாணுதல் = ஒளியுடைய நெற்றிவாய்ந்த பெண்
வாதகம் = இடையூறு
வாதகேது = புழுதி
வாதத்துவசம் = மேகம்
வாதப்பிரமி = மான்
வாதம் = இரசவாதம், காற்று, சம்பாஷணை, தருக்கம், நோய்
வாதராயணன் = வியாசமுனி
வாதனை = வருத்தம், பயிற்சி, அழுத்தம், வாசனை, துன்ப்ம்
வாதாபிசூதநன் = அகத்தியன்
வாதாயனம் = பலகணி
வாதி = வாதம் செய்பவன், காற்று
வாதிகன் = நறுமணம்கூட்டுபவன்
வாதுதல் = அறுத்தல்
வாதுவர் = குதிரைப்பாகர், யானைப்பாகர்
வாபி = குளம்
வாமதேவன் = சிவன்
வாமபாகம் = இடப்பாகம்
வாமம் = அழகு, இடப்பக்கம், தொடை, முலை
வாமலுரம் = புற்று
வாமலோசனன் = திருமால்
வாமனம் = குறள் வடிவம், தென் திசை யானை
வாமனன் = விஷ்ணு, குறளன்
வாமனார் = புத்தனார்