பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆர்ப்பரித்தல்

35

ஆவலி


ஆர்ப்பரித்தல் = ஆரவாரித்தல்
ஆர்ப்பு = கட்டு, சிரிப்பு, ஒலி, போர், மகிழ்ச்சி
ஆர்வம் = ஒலி, ஆசை, பற்று, அன்பு
ஆர்வலன் = அன்புடையோன்
ஆர்வு = விருப்பம், நிறைவு, உண்டல், செல்வம்
ஆலகாலம் = பாற்கடல், விஷம்
ஆலங்கட்டி = கல்மழை
ஆலமர்கடவுள் = சிவன்
ஆலம் = விஷம், ஆலமரம், ஆகாசம், நீர், பாம்பு, மழு, கலப்பை, மழை, அகலம், கருமை, கடல்
ஆலம்பம் = புகலிடம், ஆதாரம்
ஆலயம் = யானைப் பந்தி, நகரம், தங்குமிடம், வீடு, கோயில்
ஆலவட்டம் = விசிறி
ஆலவன் = விஷ்ணு
ஆலவாய் = தென் மதுரை, பாம்பு
ஆலவாலம் = விளை நிலம்
ஆலாசியம் = மதுரை
ஆலாலம் = விஷம், ஆலாலம், துரிஞ்சில்
ஆலி = கல்மழை, கள், துளி, மழை, காற்று, பனிக்கட்டி, மழைத்துளி
ஆலித்தல் = களித்தல், நீர் தூறுதல், கர்வம் கொள்ளல், ஒலித்தல்
ஆலிப்பு = ஆரவாரம்
ஆலுதல் = ஆடுதல், தொங்குதல், ஒலித்தல், சேருதல், களித்தல்
ஆலை = கள், கரும்பு, யானைப் பந்தி, கரும்பு ஆலை, கொட்டில்
ஆலோகம் = ஒளி, பார்வை
ஆலோலம் = பறவை கடியும் ஒசை, நீர்ஒலி, அசைதல்
ஆலோன் = சந்திரன்
ஆல் = விஷம், ஆலமரம், நீர், கார்த்திகை நட்சத்திரம், அகன்ற சட்டி
ஆவணம் = உரிமை, புனர் பூசம், உரிமைப் பத்திரம், கடைத்தெரு
ஆவநாழி = அம்புக் கூடு
ஆவம் = அம்புக் கூடு,வில் நாண்
ஆவயின் = அவ்விடம்
ஆவரணம் = மதில், மூடுதல், ஆணவமலம், சீலை, தடை, கோட்டை
ஆவர்த்தம் = ஒருவகை மேகம், தடவை
ஆவலாதி = குறை கூறுதல்
ஆவலி = வரிசை, ஒழுங்கு, இரேகை