பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விருந்தம்

384

வில்லி


  
விருந்தம் = கூட்டம், சுற்றம்
விருந்தினர் = புதியோர்
விருந்து = புதிதாய் வந்தோர்க்கு உணவு கொடுத்தல், புதுமை, சுற்றம், விருந்தினன்
விருத்தை = துளசி
விருஷ்டி = மழை
விரூபம் = விகாரரூபம், வேறுபாடு
விரூபாக்கன் = சிவன்
விரோசனன் = சந்திரன், சூரியன்
விரோசனம் = மலங்கழித்தல்
விரை = கலவைச் சாந்து, தேன், நறும்புகை, வாசனை
விரைதல் = மனம் கலங்குதல், முற்படுதல்
விலங்கல் = மலை, விலகுதல், வளைதல்
விலங்கு = குறுக்கு, தளை, மிருகம், குறுக்கிட்டுக் கிடத்தல், தடை, பறவை, குன்று
விலட்சணம் = மேன்மை
விலம் = குகை, பள்ளம், துளை, பிலம்
விலம்பனம் = தாமதம்
விலம்பிதம் = தாமதம்
விலயம் = அழிவு
விலாசம் = அழகு, விளையாட்டு, பிரகாசம், குறியீடு
விலாசனை = மகளிர் விளையாட்டு
விலாசனி = பெண், வேசி
விலாபம் = அழுதல்
விலாலம் = பூனை
விலாவணை = அழுகை
விலாவம் = அழுகை
விலாழி = குதிரைவாய் நுரை, யானைத்துதிக்கை, உமிழ்நீர்
விலாளம் = பூனை
விலேபனம் = பூசுதல்
விலோசநம் = கண்பார்வை, உட்கருத்து
விலோதம் = துகிற்கொடி, பெண்மயிர், மயிர்ச்சுருள்
விலோதனம் = பெருங்கொடி
விலோமம் = விபரீதம்
வில் = ஒளி, தனு, மூலநாள்
வில்லங்கம் = தடை, துன்பம்
வில்லம் = பாத்தி, வில்வம்
வில்லவன் = மன்மதன், சேரன்
வில்லாண்மை = வில்வன்மை
வில்லி = மன்மதன், வில்லிப்புத்தூரார், வில்போர் வீரர்