பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெலரிவனம்

390

வெருவுதல்


  
வெலரிவனம் = பத்தரிகாஸ்ரமம்
வெதிரேகம் = விசேடம், எதிர்மறை
வெதிர் = மூங்கில், நடுக்கம், செவிடு
வெதிர்ப்பு = கலக்கம், நடுக்கம்
வெதுப்புதல் = வாட்டுதல், வெம்மையாக்கல்
வெதும்புதல் = வாடுதல், கொதித்தல், கோபங்கொள்ளல்
வெந் = முதுகு
வெந்தை = பிட்டு, அவியில் வெந்த பண்டம்
வெந்திடுதல் = புறமுதுகு காட்டல், தோற்று ஓடுதல்
வெப்பம் = விருப்பம், வெம்மை
வெப்பர் = வெம்பை, சூடான உணவு
வெப்பு = சுரநோய், நெருப்பு, தொழுநோய், வெம்மை, கொடுமை
வெம்பல் = பெருங்கோபம், வெதும்புதல்
வெம்புதல் = ஒலித்தல், வாடுதல், கொதித்தல், விரும்புதல், கோபிததல்
வெப்புள் = வெம்மை
வெம்மை = உஷ்ணம், விரைவு, கடுமை, ஆசை
வெயர்ப்பு = கோபம்
வெயிலெறித்தல் = ஒளி வீசுதல்
வெயில் = ஒளி, சூரியன், சூரியகிரணம், வெம்மை
வெய்து = கொடியது, விரைவு, விருப்பத்தைக் கொடுப்பது, வெப்பம் உள்ளது
வெய்துயிர்த்தல் = பெருமூச்சு விடுதல்
வெய்துறல் = துன்பமுறுதல்
வெய்யவன் = கொடியோன், சூரியன், விரும்பியவன்
வெய்யன் = விரும்பியவன், கொடியவன்
வெய்யோன் = விரும்புவோன், சூரியன், கொடியவன்
வெரிந் = முதுகு
வெரு = அச்சம்
வெருகம் = மிருகங்களின் வாலின் கீழ்பகுதி
வெருகு = காட்டுப்பூனை, மரநாய்
வெருக்கொளல் = அச்சம் கொள்ளல்
வெருட்சி = அச்சம், மயக்கம்
வெருட்டு = அச்சம், மயக்கம்
வெருவந்தம் = அச்சம்
வெருவரல் = அஞ்சுதல்
வெருவல் = அஞ்சுதல்
வெருவுதல் = அஞ்சுதல்