பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆற்ற

37

ஆன்றவர்


ஆற்ற = மிக, முற்ற
ஆற்றலர் = பொறுக்கமாட்டாதவர்
ஆற்றல் = பொறுத்தல், செய்தல், ஒத்தல், வெற்றி, தாங்குதல், தணித்தல், வலிமை, பெருமை, நிலை, பெறுதல், முயற்சி, மிகுதி, ஆண்மை, ஞானம், வாய்மை
ஆற்றறுத்தல் = கைவிடுதல், வலியழித்தல்
ஆற்றாமை = சகிக்கமாட்டாமை, செய்ய இயலாமை
ஆற்றிடைக்குறை = ஆற்றிடையே தோன்றும் மணல்திடர்
ஆற்றுக்காலாட்டி = மருத நிலப்பெண், உழத்தி
ஆற்றுணவு = கட்டுச்சோறு, வழிக்கு உணவு
ஆற்றுதல் = தணித்தல், சுமத்தல், நடத்துதல், பிரித்தல், ஒத்தல்
ஆற்றுப்படுத்த்ல் = வழிப்படுத்துதல்
ஆற்றுப்படை = வழிப்படுத்தி அனுப்புதல்
ஆற்றுவரி = ஒரு வகை இசைப்பாட்டு
ஆற்றொழுக்கு = ஆற்றுநீர் ஓட்டம்
ஆனஞ்சு = பசுவின் பஞ்சகவ்வியம், பால், தயிர், நெய், கோமயம், கோசலம்
ஆனந்தன் = சிவன், அருகன்
ஆனந்தை = உமை, குறிஞ்சி, யாழ் வகைகள்
ஆனனம் = முகம், தேவதாரு
ஆனா = அடங்காத, கெடாத, பொருந்தாத, குறையாத, நீங்காத, அமையாத
ஆனாயன் = மாட்டிடையன்
ஆனியம் = பருவம், நாள்
ஆனிரை = பசுக் கூட்டம்
ஆனிலன் = வீமன், அனுமன்
ஆனிலை = தொழுவம், பசுமந்தை நிற்கும் இடம்
ஆனுதல் = நீங்குதல்
ஆனை = அத்திமரம், யானை,
ஆனைத்தி = பெரும் பசி நோய்
ஆனைப்பந்தி = ஆனைக் கூட்டம்
ஆன் = அவ்விடம், பசு
ஆன்ற = மாட்சிமைப்பட்ட, விசாலமான, அடங்கிய, நிறைந்த, இல்லாமற்போன
ஆன்றமைதல் = அடங்கி அமைதல்
ஆன்றல் = மாட்சிமை, மிகுதல், அகலம், நீங்கல், அமைதல்
ஆன்றவர் = பெரியோர், அறிவுடையோர், அமைந்தவர் , தேவர்