பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை அகராதி




அகக்கூத்து (2) = சாந்திக் கூத்து, வினோதக்கூத்து.


அகச்சமயம் (6) = பாடாண வாதம், பேதவாதம், சிவ சமயவாதம், சிவசங்கிராந்தவாதம், சிவசத்துவிதம், ஒரு சிலர் (சைவம் பாசுபதம், மாவிரதம், களாமுகம், வாமம், வைரம் என்பர்.)


அகத்திணை (7) = கைக்கிளை, குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், பெருந்திணை.


அகத்தியர் மாணவர் (12) = செம்பூட்சேஅய், வையாபிகர், அதங்கோட்டாசான், அவிநயர், காக்கைபாடினியர், தொல்காப்பியர், துராலிங்கர், வாய்ப்பியர், பனம்பாரனார், கழாரம்பர், நற்றத்தர், வாமனர்.


அகப்பகை (6) = காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்.


அகப்புறச்சமயம் (6) = ஐக்கிய வாத சைவம், பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம்


அகிற்கூட்டு (5) = சந்தனம், கற்பூரம், எரிகாசு, தேன், ஏலம்


அக்கினி (3) = ஆகவனீயம், காருகபத்தியம், தாட்சிணாக்கினி


அங்கம் (5) = திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம் (பஞ்சாங்கம்)


அங்கம் (4) = யானை, தேர், குதிரை, காலாள் (சதுரங்கம்)


அங்கம் (6) = படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் (அரசியல்)


அங்கம் (10) = மலை, யாறு, நாடு, ஊர், மாலை, குதிரை, யானை, முரசு, கொடி, செங்கோல் (தசாங்கம்)


அசுவகதி (6) = (குதிரை நடை) மல்லகதி, மயூரகதி, வானரகதி, சசகதி, சரகதி


அசுவனி தேவர் (2) = தத்திரன், நாதத்தியன்


அணு (3) = அணு, பாமானு, இலேசம்


அண்டம் (5) = பிருதிவி அண்டம், அப்பு அண்டம், தேயு அண்டம், வாயு அண்டம், ஆகாய அண்டம்