பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருகன்குடை

404

அளவை


மோகினி, வேள்விப்பதி, வியாதன், தன்வந்திரி, பெளத்தன்.


அருகன் குடை (5) = சகல பாசனம், (பொற்குடை) சந்திராதித்தியம், (முத்துக்குடை) நித்திய வினோதம், (இரத்தினக் குடை.)


அருகன்குணம் (8) = அநந்த ஞானம், அநந்த தரிசனம், அநந்த விரியம், அநந்தசுகம், பெயரின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை, அழியா இயல்பு


அருவவடிவம் (4) = சிவம், சத்தி, விந்து, நாதம்.


அரை (4) = பொருக்கரை, முன்னரை, கோளரை, பொகுட்டரை.


அவத்தை (5) = சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்.


அறப்பகுதி (2) = இல்லறம், துறவறம்.


அறத்துவகை (3) = ஒழுக்கம், தண்டம், வழக்கு.


அழகு (10) = சுருங்கச் சொல்லல், விளங்கவைத்தல், நவின்றோர்க்கு இனிமை, நன்மொழி புணர்த்தல், ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல், முறையின் வைப்பு, உலகமலையாமை, விழுமியது பயத்தல், விளங்கு உதாரணத்தாதல்.


அழகு (8) = அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழை (எண் வகை வனப்பு)


அளவை (8) = காட்சி (காணல்), அனுமானம் (புகையுண்டெனில் நெருப்பு உண்டென அறிதல்), உவமானம் (முகம் சந்திரன் போன்றது எனல்), ஆகமம் (பெரியோர் வாக்கு), அருத்தாபத்தி (பகல் உண்ணான் பருத்திருக்கிறான் எனில், இரவில் உண்பதால் பருத்திருக்கிறான் என்பது), பாவம் (முன்னும் இல்லை பின்னும் இல்லை ஒரு காலத்தும் இல்லை ஒன்றின் ஒன்றில்லை எனல்), ஐதிகம் (இம்மரத்தில் பிசாசு இருக்கிறது எனல்), சம்பவம் (நூறு என்னும் தொகையில் பத்து என்னும் தொகை அடங்கி இருக்கிறது எனல்.)