பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இசைக்கிரியை

407

இராகம்


நரம்புக்கருவி, (வீணை) கஞ்சக்கருவி, (தாளம்) மிடற்றுக்கருவி, (வாய்ப்பாட்டு)


இசைக்கிரியை (8) = எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், எலி, உருட்டு, தாக்கு.


இசைக்குரியவகை (8) = வார்தல், வடித்தல், உந்தல், உறழ்த்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டை.


இசைக்குழற்குரிய மரம் (5) = கருங்காலி, சந்தனம், செங்காலி, மூங்கில், வெண்கலம்.


இடைவள்ளல் (7) = அக்குரன், அந்திமான், கன்னன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன்.


இதிகாசம் (3) சிவரகசியம், பாரதம், இராமாயணம்.


இந்திரபோகம் (10) = அமுதம், உச்சைச்சரவம், (குதிரை) இடி, காமதேனு, நவநிதி, இந்திராணி, அமராவதி, ஐராவதம், வச்சிராயுதம், சுதன்மம், கற்பகமலர், சயந்த மண்டபம், சயந்த குமாரன், வசந்த மாளிகை, மேக வாகனம், மருத நிலம்.


இந்திரன்மேகம் (7) = ஆவர்த்தம், புட்கலா வர்த்தம், சம்காரித்தம், சம்வர்த்தம், காளமுகி, துரோணம், நீலவருணம்.


இந்திரியங்கள் (10) = வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம், சுரோத்திரம், தொக்கு, சக்கு, சிங்குவை, ஆக்கிராணம்.


இந்திரியவகை (2) = ஞானேந்திரியம், கன்மேந்திரியம்.


இயமம் (10) = கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் மனைவியரையும் பொது மகளிரையும் விரும்பாமை, இரக்கம், வஞ்சமில்லாமை, பொறையுடைமை, மனங்கலங்காமை, அற்பாகாரம், சுசியுடைமை.


இரசம் (9) = சிருங்காரம், வீரியம், நகை, கருணை, சாந்தம், குறசை, அற்புதம், பயம், கோபம்.


இரசோகுண விருத்தி (8) = யான் என தென்னும் செருக்கு, வீரம், கொடுமை, பெரு முயற்சி, வஞ்சனை, திடமுடைமை, இரக்கம் இன்மை, போக முடைமை, இடம்பம்.


இராகம் (32) = பைரவி, தேவக்கிரியை, மேகரஞ்சி,