பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிரபந்த அகராதி




  
அகப்பொருட் கோவை = கோவை என்பது கோக்கப் பட்ட மாலையாகும். இங்கு இன்பப் பொருள்களை ஒழுங்காகக் கோவைப்படுத்திக் கூறுவதால் இது அகப்பொருட் கோவை எனப்பட்டது. இது நாநூறு கட்டளைக் கலித்துறைகளால் தலைவன் தலைவியர் கூடிக் களவு மணத்தின் பின் கற்பு மணத்தால் மணந்து இன்புற்று இல்லறம் நடத்துதல் முதலான பலதுறைகளைக் கொண்டு விளங்குவது. நானூறு துறைகளுக்கு மேலும் பாடப்பட்ட கோவை நூல்களும் தமிழில் உண்டு. (உ-ம்) திருக்கோவையார், அம்பிகாபதி கோவை.

அங்கமாலை = ஆண்மகன் பெண்மகள் உறுப்புக்களை வெண்பாவாலேனும் வெளிவிருத்தத்தாலேனும் பாதம் முதல் முடி வரையிலேனும், முடி முதல் பாதம் வரையிலேனும் முறை கெடாது, தொடர்புறப் பாடுவது, அங்கங்களை வரிசைப் படுத்திப் பாடப்படுதலின் இப்பெயர் பெற்றது (உ-ம்) அப்பர் பாடியுள்ள திருவங்கமாலை.

அட்டமங்கலம் = கடவுள்மீது பாடலைப்பாடி, அக்கடவுள் காப்பாற்றுவாராக என ஆசிரியவிருத்தம் எட்டு அமைய அந்தாதித் தொடையில் பாடப்பெறுவது.
 
அநுராகமாலை = தலைவன் ஒருவன் தான்கண்ட கனவில் ஓர் அழகியமாதுடன் ஐம்புலன்களும் இன்புறப் புணர்ந்து மகிழ்ந்ததைத் தன் பாங்கனுக்குக் கூறுவதுபோல நேரிசைக் கலிவெண்பாவினால் பாடப்படுவது.
 
அரசன் விருத்தம் = பத்துக் கலித்துறையும் முப்பது விருத்தமும் கலித்தாழிசையும் ஆகிய இவற்றால் மலை, கடல், நிலம் இவற்றின் வருணனையும், வாள் மங்கலம் தோள் மங்கலத்தையும் பாடி முடிப்பதாகும்.

அலங்காரபஞ்சகம் = வெண்பா, கலித்துறை, அகவல், ஆசிரியவிருத்தம் ஆகிய இவை மாறி