பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்க்கீர்த்திமாலை

445

வளமடல்





பா, வெண்பா, கலித்துறை ஆகிய பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அந்தாதி முறைப்படி முப்பது பாடலால் அமைவது (உ-ம்) சிதம்பர மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை.

மெ

மெய்க்கீர்த்திமாலை = சொற்சீரடி என்னும் கட்டுரைச் செய்யுளில் குலமுறையில் விளங்கியவர்களின் சிறப்பை எடுத்து மொழிவது.(உ-ம்) கல்வெட்டு.

வசந்தமாலை = தென்றல் காற்றைப் புகழ்ந்து பாடுவது.

வரலாற்றுவஞ்சி = குலமுறை பிறப்பு முதலிய சிறப்பியல்புகளை வஞ்சிப்பாவால் பாடுவது.

வருக்ககோவை = அகர முதலாகிய எழுத்துக்கள் முதலில் அமையக் கட்டளைக் கலித்துறையில் பாடப்படுவது. (உ-ம்) நெல்லை வருக்ககோவை.

வருக்கமாலை = மொழிக்கு முதலாகும் வருக்க எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு செய்யுள் பாடப்பட்டுவருவது. (வருக்கக் கோவையில் அமையும் செய்யுட்கள் கட்டளைக்கலித்துறை இருத்தல் வேண்டும்.)

வள மடல் = அறம், பொருள், இன்பம் ஆகிய இவற்றின் பயனையும் வெறுத்து, மங்கையரால் பெறும் காம இன்பமே பெரிதெனவும் பயனுடைய தெனவும் கொண்டு பாட்டுடைத்தலைவனது இயற்பெயர்க்குப் பொருந்தமானதை எதுகையாக அமைத்துத் தனிச்சொல் இன்றி இன்னிசை வெண்பாவால் தலைமகன் கெஞ்சிக் கேட்டல், தன் எண்ணம் நிறைவேறாதது கண்டு அவன் மடல் ஏறுவதாக ஈரடி எதுகை வரப் பாடப்படுவது. (மடலேறுதலானது தலைமகன், தான் காதலித்த தலைமகளைப் பெற அவளது உருவத்தை ஒரு கிழியில் எழுதி வைத்துக் கொண்டு உடல் முழுமையும் திருநீற்றை அணிந்து கொண்டு, மானத்தை மறைக்கச் சிறு ஆடையை மட்டும் அணிந்துகொண்டு, பனங்கருக்கால் செய்த குதிரையில் ஏறிக்கொண்டோ, அதனை இழுத்துக்