பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கச்சியானந்தருத்திரேசர்

467

கந்த புராணம்


கச்சி யானந்தருத்திரேசர் வண்டுவிடு தூது = ருத்திரேசரிடம் வண்டைத் தூதாக அனுப்பும் முறையில் பாடப்பட்ட நூல். பாடியவர் கச்சியப்ப முனிவர். இதில் வண்டுக்குரிய பல வேறு பெயர்களும் அழகுறக் கூறப்பட்டுள்ளன. தூது செல்வதற்கு வண்டே தகுதியுடையது என்பதற்குரிய காரணமும் இதில் திகழும். காலம் கி. பி. 18-ஆம் நூற்றாண்டு.

கடம்பவன புராணம் = மதுரைமா நகரைப்பற்றிய தல புராணம். இதனை வீமநாத பண்டிதர் என்பவர் பாடியுள்ளார். இதன் காலம் கி. பி. 20-ஆம் நூற்றாண்டு. முன்னர்க் கடம்பக் காடாய் இருந்து பின் மதுரை என்ற பெயர் பெற்றமைக்குரிய காரணங்களை இதன் மூலம் அறியலாம்.

கந்தபுராணக் கீர்த்தனை = இராமாயணக் கீர்த்தனை போலக் கந்தபுராணத்தில் அடங்கிய கதைகள் கீர்த்தனை முறையில் அமைந்த நூல். இதனைப் பாடியவர் கவிக்குஞ்சர பாரதியார் என்பவர். காலம் கி. பி. 20-ஆம் நூற்றாண்டு.

கந்த புராணச் சுருக்கம் = கந்தபுராணம் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கவிகளையுடையது. அங்ஙனம் பரந்துபட்ட நூலை ஒரு சிலரே படித்து வருகின்ற காரணம் பற்றிப் பலரும் படிக்க வேண்டுமெனச் சுருங்கிய முறையில் 1049 செய்யுட்களில் சம்பந்த சரணாலயர் என்பவர் அப்பரந்த நூலின் கதைத் தொடர்பு சிறிதும் வழுவா வண்ணம் இந்நூலைப் பாடியுள்ளார். கந்த புராணத்தில் காண்டங்களும், அக்காண்டங்கட்குப் பல படலங்களும் அமைந்துள்ளன. இந்நூலில் காண்டங்கள் மட்டும் அடங்கியுள்ளன. கி.பி.16-ஆம் நூற்றாண்டு.

கந்த புராணம் = இது கச்சியப்ப சிவாசாரியரால் பாடப்பட்டது. முருகப் பெருமான், 'திகடச் சக்கரம்' என்று தொடங்கிக் கொடுக்க அதனையே முதலாகக் கொண்டு இந்நூல் பாடப்பட்டுள்ளது. இது 1. உற்பத்தி காண்டம், 2. அசுர காண்டம், 3. மகேந்திர காண்டம்,