பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோமேசர் முதுமொழி

496

ஞான வெட்டியான்


கல சிவப்பிரகாச சுவாமிகளால் பாடப்பட்ட நூல். தமிழ் கற்க விரும்புபவர் படித்துக்கொள்ள வேண்டிய நூல். காலம் 17 ஆம் நூற்றாண்டு. ஒவ்வொரு பாடலிலும் அமைந்த கற்பனைகள் படித்து இன்புறுதற்குரியன. திருவண்ணாமலை உயர்ந்து விளங்குவது, தவமாகிய கப்பலை நடத்த இது கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது என்பது அக்கற்பனைகளுள் ஒன்று.

சோமேசர் முதுமொழி வெண்பா = இதில் உள்ள ஒவ்வொரு வெண்பாவின் ஈற்றிலும் ஒவ்வொரு திருக்குறட்பா அமைந்துள்ளது. அக் குறட் கருத்ததை விளக்கும் கதைக் குறிப்பு வெண்பா பாவின் முதலில் அமைந்துள்ளது. இது சிவஞான முனிவரால் பாடப்பட்ட நூல். காலம் கி.பி.18ஆம் நூற்றாண்டு.

சோழ மண்டல சதகம் = சோழ நாட்டின் சிறப்பும் அந்நாட்டைச் சார்ந்த புலவர்கள் வள்ளல்கள் முதலினோர் வரலாறுகளும் அறியத் துணை செய்யும் நூல். ஆத்மநாத தேசிகர் பாடிய நூல். காலம் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு.

செள

செளந்தரியலகரி = இது வடமொழியில் சங்கராசாரிய சுவாமிகளால் பாடப்பட்டது. இதனை வீரைக் கவிராச பண்டிதர் தமிழ்ப்பாவில் பாடி அமைத்தனர். கி.பி. 11-ஆம் நூற்றாண்டு. இதில் திருஞான சம்பந்தருக்குத் தேவியார் ஞானப்பபால் ஈந்ததைப் பாராட்டிப் பேசி இருப்பதைக் காணலாம். இந்நூல் திருஞான சம்பந்தரைத் திராவிடசிசு என்று குறிப்பிடுகிறது.


ஞா

ஞான வாசிட்டம் = இது ஒரு வேதாந்த நூல். வசிஷ்டர் ராமனுக்கு உபதேசம் செய்த முறையில் அமைந்த நூல். ஆளவந்தார் பாடிய நூல். கி.பி. 18-ஆம் நூற்றாண்டு. இந்நூலில் சில பாடல்களைத் திரட்டி. ஞான வாசிட்டத் திரட்டு என்ற பெயரால் நமச்சிவாய ஐயர் ஒரு நூலாக வெளியிட்டுள்ளார்.

ஞான வெட்டியான் = இது கி. பி. 18 ஆம் நூற்றாண்டிற்குப் பின் எழுந்த நூல். இது வள்ளுவரால் பாடப்