பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீதிநெறி விளக்கம்

521

நெய்தற் கலி


நீதிநெறி விளக்கம் 521 நெய்தற் கலி

என்பவர். இந்நூலில் மக்கள் நடத்தைக்கு இன்றியமையாத நீதிகள் பல பா வடிவில் அமைந்துள்ளன. தாய் தந்தையரே முதல் தெய்வம் என்பதும், உண்மைக் கற்புடைய மாதர் ஆண்களை ஏறிட்டும் பாரார் எனபதும், அவ்வாறே தம் கணவர் பிற பெண்களைப் பார்க்க இடம்கொடார் என்பதும் போன்ற நீதிகள் பல உள. காலம். கி.பி. 19 ஆம் நூற்றண்டு.

நீதிநெறி விளக்கம் = நீதி மார்க்கங்கள் இன்னிசை என்பதை, விளக்கிக் கூறும் கருத்துடன் எழுதப்பட்ட நூலாகும். இது பெரிதும் திருக்குறளைத் தழுவி எழுதப்பட்ட நூலாகும். திருமலை நாயக்கனுடைய வேண்டுகோளால் குமரகுருபர சுவாமிகள் இயற்றி அருளினார். இதன் காலம் கி. பி. 17 ஆம் நூற்றாண்டு.

நீதி வெண்பா = இது நீதி நூல்களில் ஒன்று. இதன் ஆசிரியர் யாவர் என்று அறிந்து கொள்வதற்கில்லை.

60

நீலகேசி = இதன் ஆசிரியர் தெரிதற்கு இல்லை. இதில் சைன மதத்துக் கொள்கைகள் கூறப்பட்டு்ளன. இதில் பெளத்த மதம், சாங்கிய மதம், வைதீக மதம் முதலான மதக் கொள்கைகள் கண்டித்துக் கூறப்பட்டுள்ளன. இந்நூலுக்கு வாமன முனிவர் உரை எழுதியுள்ளாா்.

நெ

நெடுநல்வாடை = இது சங்கம் மருவிய பத்துப்பாட்டுள் ஒன்றாகும். இதனைப் பாடியவர் நக்கீரர். இது பாண்டியன் நெடுஞ்செழியன் மீது பாடப்பட்டது. வாடைக்காற்றின் இயல்பு இதில் அழகுற இயம்பப் பட்டுள்ளது. கடைச்சங்கக் காலத்திய நூல்.

நெய்தற் கலி = இதன் ஆசிரியர் நல்லந்துவனார். நெய்தல் திணையின் இயல்பு அழகுறக் கூறும் நூல். இது கலித்தொகை நூலுள் ஒரு பகுதி. இதற்கு நச்சினார்க்கினியர் உரை உண்டு. காலம் கடைச்சங்க காலம்.