பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாயு சங்கிதை

545

விவேகசிந்தாமணி


வாயு சங்கிதை = வியாசர் வடமொழியில் இயற்றியதை ஒட்டி வரதுங்க பாண்டியர் தமிழில் பாடிய நூல். சிவபரத்துவத்தை விளங்குவது. காலம் 16ஆம் நூற்றாண்டு.

வீ

விநாயக புராணம் = இது பார்க்கவ புராணம் என்றும் கூறப்படும். விநாயகப் பெருமானது, வரலாற்றையும் பெருமையையும் அவரை பூசித்துப் பேறு பெற்றவர்களையும் எடுத்து மொழிவது. திருக்குறள் கருத்துக்கள் மிகுதியும் இதில் எடுத்து ஆள்ப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலும் பொருட்பாலில் உள்ள குறட்பாக்களின் கருத்துக்களைப் பரக்கக் காணலாம். ஆசிரியர் கச்சியப்ப முனிவர். காலம் 18-ஆம் நூற்றாண்டு.

விநாயகர் அகவல் = விநாயகர் சதுர்த்தி அன்று முக்கியமாகப் பாராயணம் செய்யும் நூல். இதனை ஒளவையார் பாடினர். இவ்வவ்வையார் சுந்தரர் காலத்தவர். இந்நூலைப் பாடி விநாயகப் பெருமான்

69

திருவருளால் சுந்தரருக்கு முன் கைலாயம் சேர்ந்தவர். எளிய நடையில் செய்யுள் அமைப்பு இருப்பினும் அரிய கருத்து உடைய செய்யுளாகும். இதனைப் பிள்ளையார் அகவல் என்றும் கூறுவர். காலம் கி.பி.9-ஆம் நூற்றாண்டு.

வினோத ரசமஞ்சரி = இது ஒர் உரைநடை நூல். படிக்கப்படிக்கச் சுவை தரும் நூல். கம்பரைப் பற்றி முழுவிவரம் இந்நூலால் அறியலாம். தமிழறியும் பெருமாள் கதை இதில்தான் உள்ளது. சிதறுண்ட பல கர்ண பரம்பரைச் செய்திகளை ஒருங்கே அறிவதற்கு இந்நூல் துணை செய்யும். இதன் ஆசிரியர் வீராசாமி செட்டியார். காலம் கி.பி.19ஆம் நூற்றாண்டு.

 விவேக சிந்தாமணி = இது ஒரு தொகுப்பு நூல். இதில் பல நூல்களிலிருந்தும் தேர்ந்து எடுக்கப்பட்ட பாடல்கள் உள்ளன. அவை அனைத்தும் சிறந்த நீதிகளைக் கற்பிப்பனவாய் இருக்கும். பல நூல் கருத்துக்களை ஒரு நூலில் காண்பதற்கு இது ஒரு பெருந்துணையானது.