பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆபிரகாம் பண்டிதர் 561 ஆறுமுக நாவலர்



யாடுகையில், அந்நதி ஆட்ட நந்தியை அடித்துக்கொண்டு போயது. இதனால் வருந்திக் கொண்டு கடற்கரையை அடைய, அங்கு மருதி என்பவள் ஆட்ட நந்தியைக் காட்டி ஆதிமந்தியுடன் சேர்த்தனள். அதன்பின் மகிழ்ச்சியுடன் திரும்பினர். இம்மாதரார் பாடல் குறுந்தொகையில் ஒன்று உளது.

ஆபிரகாம் பண்டிதர் = இவர் தஞ்சாவூரினர். இவர் நல்ல சங்கீதப் பயிற்சி பெற்றவர். கர்ணாமிர்த சாகரத் திரட்டு என்னும் நூலை இயற்றியவர். தமிழ் இசையைப் பற்றி அறிதற்கு இது பெருந்துணை செய்யும். இவர் கி.பி. 20 ஆம் நூற்றாண்டினர்.

ஆரியப்பப் புலவர் = இவர் வேளாள மரபினர். கும்பகோணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பாகவதம் என்னும் நூலைப் பாடியவர். அது விஷ்ணுபாகவதம் எனப்படும். இதில் 1970 பாடல்கள் உள. காலம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு.

ஆலாலசுந்தரம் பிள்ளை = இவர் சிறந்த சித்தாந்தப் 71 புலவர். பெரியபுராணத்திற்குப் பேருரை கண்டவர். அதன் வாயிலாகச் சேக்கிழாரது கவிநயத்தை பாரக்கக் காணலாம். திருக்களிற்றுப்படியாருக்கு உரை எழுதியவர். ஆசாரியப் பிரபாவம் என்னும் வசன நூலையும் எழுதியவர். காலம் கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.

ஆளவந்தார் = இவர் பிராமணர். வேம்பத்துர்வாசி. வடமொழி தென்மொழி அறிந்தவர். ஞானவாசிட்டம் என்னும் நூலை இயற்றியவர். இது ஒரு பெயர்ப்பு நூல். கி.பி. 18 ஆம் நூற்றாண்டினர்.

ஆறுமுகத் தம்பிரான் = யாழ்ப்பாணர். திருத்தருமை ஆதினத்தில் புலவராக இருந்தவர். மடத் தலைவராகவும் திகழ்ந்தவர். பெரியபுராணத்திற்கும் சிறந்த உரை கண்டவர். காலம் கி.பி. 19 ஆம் நூற்றாண்டு.

ஆறுமுக நாவலர் = இவர் யாழ்ப்பாணத்தைச் சார்ந்த நல்லூரில் கந்தப் பிள்ளை என்பாருக்குப் பிள்ளையாகப் பிறந்தவர். தமிழ் உரை நடை எழுது