பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிராச பண்டிதர்

575

காக்கைபாடினியார்


நூலைச் செய்தவரும், பதினோராம் திருமுறையில் காணப்படும் திருக்கண்ணப்பதேவர் திருமறம பாடியவரும் இப்பெயரால் குறிப்பிடப்பட்டு வருகின்றனர். பிற்பட்ட நூற்களைப் பாடிய கல்லாடர் சங்க காலக் கல்லாடர் அல்லர் என்பது சிலரது கருத்தாகும்.

கவிராச பண்டிதர்= இவர் வீரைக் கவிராச பண்டிதர் என்றும் கூறப்படுவார். இவர் பாண்டிநாட்டு, வீர சோழன் ஊரினர். அந்தண மரபினர். சங்கராசாரியர் பாடிய சௌந்தரியலகரி, ஆனந்தலகரி என்னும் வடமொழி நூற்களைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாடியவர். கி.பி.16 ஆம் நூற்றாண்டினர்.

கனகசபைப் பிள்ளை = இவர் யாழ்ப்பாண ஊரினர். பின்னர் சென்னையில் வாழ்ந்தவர். ஆங்கிலம் பயின்று பி.ஏ. பட்டம் பெற்றவர். இவர் 1800 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர் என்னும் நூலை இயற்றியவர். களவழி காற்பது, விக்ரம சோழன் உலா, கலிங்கத்துப் பரணி நூற்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். கி.பி. 19 ஆம் நூற்றாண்டினர்.

கனகசுந்தரம் பிள்ளை = திரிகோண மலையில் பிறந்தவர். தமிழ் நாவலர் சரிதை என்னும் நூலைப் பதிப்பித்தவர். இல்லாண்மை என்னும் உரைநடை நூலையும் எழுதியவர் காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.

கா

காக்கைபாடினியார் நச்செள்ளையார் = கடைச்சங்க காலத்தவர். ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடி ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசுகளும் அரசன் பக்கத்தில் அமரும் பேறும் பெற்றவர். பெண்பாற் புலவர். இவரது பாடல்கள் பதிற்றுப்பத்து என்னும் நூலில் ஆறாம் பத்தும், குறுந்தொகையில் ஒன்றும், புறத்தில் ஒன்றும் காணப்படுகின்றன. காக்கை பாடினியம் என்னும் யாப்பு இலக்கண நூலைச் செய்த வரும் காக்கைபாடினியார் என்று கூறப்படுகின்றார். இந் நூலைப் பாடியவர் சங்க காலத்தவர் அல்