பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொக்கப்பநாவலர்

593

சோழன் குளமுற்றத்து


சொக்கப்பநாவலர் = இவர் ஓர் உரையாசிரியர். தஞ்சை வாணன் கோவைக்கு உரை எழுதியவர். குன்றத்தூர் வாசி என்று இவரைக் கூறுவர். கி. பி. 18ஆம் நூற்றாண்டு.

சோ

சோமசுந்தர நாய்க்கர் = இவர் ஒரு சிறந்த சைவசித்தாந்தி. வடமொழி தென்மொழிகளையும், சைவசித்தாந்த சாஸ்திரங்களையும், திருமுறைகளையும், நன்கு பயின்றவர். சைவசித்தாந்த சண்ட மாருதம் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர். இவர் வைணவ சமயத்தைச் சார்ந்த குடும்பத்தினர். அதுபோது சங்கசாமி என்பது பிள்ளைத் திருநாமம். இவர் ஏகாம்பர சிவயோகியாரால் சோமசுந்தரம் என்று அழைக்கப்பட்டவர். வாதம் செய்து தம் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் ஈடும் எடுப்பும் அற்றவர். தம் அறிவுத் திறனைப் பேச்சாலும் எழுத்தாலும் காட்டியவர். இவர் திருஞான சம்பந்தரை ஆத்மார்த்த ஞானாசிரியராகக் கொண்டவர். சென்னை, சூளையில் வாழ்ந்தவர். இவர் நூற்றுக்கு மேலும் நூல்களை எழுதியவர். அனைத்தும் சிவபரத்துவம், நால்வர் பெருமை, சைவசமய ஏற்றம் முதலான பொருள்களைக் கொண்டு மிளிரும். இவர் எழுதிய நூற்களில் சில சிவாதிக்க இரத்தினாவளி, சித்தாந்த ரத்தினாகரம், சித்தாந்த ஞானபோதம், ஆசாரிய பிரபாவம், வேத சிவாகமப் பிரமானியம், சிவகாமப் பஃறொடை வெண்பா முதலியன. இவரது தலை சிறந்த மாணவர் மறைமலையடிகளார். காலம் 19 ஆம் நூற்றாண்டு. இவர் சொற்பொழிவு ஆற்றும்போது, எவரும் மேலாடை அணிந்து கொண்டு கேட்டல் கூடாது. அப்படி மேலாடையுடன் கேட்பவரை எழுந்து போமாறு கூறும் அத்துணைக் கண்டிப்பு உடையவர்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் = இவர் கடைச்சங்க காலத்தவர். சோழமரபினர். கவிபாடும் காவலர் ஆவார். கொடையும் வீரமும் உடையவர். இவர் சிறுகுடி கிழான் பண்ணன் என்