பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தோலாமொழித் தேவர்

599

நக்கீரர்


திய மாபெரும் புலவர். இவரைத் திரணதூமாக்கினி என்றும் கூறுவர். அகத்தியர் மாணவர்களுள் ஒருவர் என்பர். "ஒல்காப் பெருமைத் தொல்காப்பியர்" என்று சிறப்பிக்கப்படும் பெருமை சான்றவர். இக்காலத்தில் தமிழர் தனிப்பெருமையுடன் திகழ்வதற்கு இவரது நூலாகிய தொல்காப்பியமே காரணமாகும். காலம். கி.பி.4ஆம் நூற்றாண்டு.

தோ

தோலாமொழித் தேவர் = இவர் எழுதிய நூலே சூளாமணி என்பது. இவர் சைனர். இவரைக் கார்வெட்டி நகரத்தரசன் விசயன் என்பான் ஆதரித்தனன். கி. பி. 10 ஆம் நூற்றாண்டு.

நக்கணையார் = கடைச்சங்க காலத்தவர். பெண்பாற் புலவர். வணிக மரபினர். இவ்வம்மையார் தந்தையார் பெருங்கோழி நாய்க்கன் என்பவர். போர்வைக்கோ பெருநற்கிள்ளி என்னும் மன்னனிடம் காதல் கொண்டு மணக்க விரும்பியவர். இவர் நற்றிணையில் இரண்டும், அகத்தில் ஒன்றும், புறத்தில் மூன்றும் பாடியுள்ள பாடல்கள் உண்டு.

நக்கீரர் = நல்ல மொழிகளைப் பேசிய காரணத்தால் நக்கீரர் எனப்பட்டார். இவரது தந்தையார் மதுரையில் கணக்காயர் (ஆசிரியர்) தொழிலை மேற்கொண்டிருந்த காரணத்தால் இவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் என்று கூறப்பட்டவர். தமிழ்ச் சங்கப் புலவர்களின் தலைவர். இறையனார் அகப்பொருளுக்குச் சிறந்த உரை கண்டவர். வேளாப் பார்ப்பனர் என்னும் மரபினர். தமிழ் மொழியினை எவரேனும் இழிவாகக் கூறின் அவர்களே அழியும் வண்ணம் தமிழ்பாடும் ஆற்றல் மிக்கவர். அப்படியே கொண்டான் என்னும் குயவன், வடமொழி உயர்ந்தது என்று கூறக்கேட்டு, அவன் சாவுமாறு பாடிப், பின்னர் பலர் வேண்டுகோளுக்கு இணங்கி அவன் உய்யுமாறும் பாடியுள்ளார். திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை என்னும் நூற்களும் இவரால் பாடப்பட்டவைகளே.