பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

602


கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட போது நீங்கியதாம். கடைச்சங்க காலத்தவர். குறுந்தொகையில் 2, புறத்தில் 2, திருவள்ளுவ மாலையில் 1, ஆக 5 பாடல்கள் இவரால் பாடப்பட்டுள்ளன.

நல்லசாமிப் பிள்ளை = இவர் சிறந்த தமிழ் அறிவும் ஆங்கில அறிவும் பெற்றவர். பி.ஏ.பி.எல். பட்டம் பெற்றவர். டிஸ்டிரிக்ட் முன்ஷீப்பாகப் பணி புரிந்தவர். பெரியபுராணம், சிவஞான சித்தியார், சிவஞான போதம், சிவப்பிரகாசம், உண்மை விளக்கம், சைவ சமய நெறி, திருவருட்பயன் முதலான நூற்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். சித்தாந்த தீபிகையின் பத்திராதிபர். கி.பி.19ஆம் நூற்றாண்டு.

நல்லாப்பிள்ளை = இவர் பாரதம் பாடிய நல்லாப்பிள்ளை எனப்படுபவர். தொண்டை மண்டலத்தில் முத்தாலப்பேட்டையில் கணக்கர் குடியில் பிறந்தவர். தெலுங்கு, கன்னடமும் அறிந்தவர். தமிழிலும் வடமொழியிலும் புலமைமிக்கவர். தெய்வயானை புராணமும் இவர் பாடியதாகக் கூறுவர். கி.பி.18ஆம் நூற்றாண்டு.

நா

நாராயணசாமி ஐயர் = இவர் திருத்துறைப் பூண்டிப் பின்னத்தூரில் பிராமணக்குடியில் பிறந்தவர். வடமொழி தென்மொழியில் புலமை மிக்கவர். நற்றிணைக்கு அழகான உரை எழுதியவர். இவர் பல நூல்களை எழுதியிருப்பதாகத் தெரிகிறது. இடும்பவன புராணம், சிவகீதை, மாணாக்கர் ஆற்றுப்படை, பழையது விடு தூது, செருப்பு விடு தூது முதலியன குறிக்கத்தக்கன. கி.பி.19ஆம் நூற்றாண்டு.

நாராயண பாரதி = இவர் பிராமண வகுப்பினர். இவர் மணவாள நாராயணன் என்னும் பிரபுவின் வேண்டுகோளால் ஒரு சதகம் பாடியுள்ளார். அது திருவேங்கட சதகம் எனப்படும். அதனைக் கோவிந்த சதகம் என்றும் கூறுவர். கி.பி.18ஆம் நூற்றாண்டு.

நாற்கவிராச நம்பி = இவர் தொண்டை நாட்டைச் சார்ந்த புளியங்குடியில் பிறந்தவர். சமணசமயத்