பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொய்கை யாழ்வார்

611

போப்பையர்


கணைக்கால் இரும்பொறை, சோழன் செங்கண்ணனால் சிறைப்பட்ட போது அவனை மீட்கக் களவழிநாற்பது என்னும் நூலைப் பாடியவர். நற்றிணையில் 1, புறத்தில் 1, இருபாடல்கள் உண்டு. இவர் இன்னிலை என்னும் நூலும் செய்ததாகக் கூறுவர். அது எட்டாம் நூற்றாண்டு என்பது ஒரு சிலரது கருத்து. இந்நூலை எழுதியவர் பொய்கையாழ்வாராக இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.

பொய்கை யாழ்வார் = வைணவ சமயாசிரியர் பன்னிருவர்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் மூவர் எனப்படுவோருள் ஒருவர். காஞ்சிபுரத்தில் பிறந்தவர். திருவெஃகா என்னும் வைணவத் திருத்தலத்தின் பொய்கையில் இவர் தோன்றினாமைப் பற்றிப் பொய்கையார் எனப்பட்டவர். இயற்பாவைச் சார்ந்த முதல் திருவந்தாதி இவரால் பாடப்பட்டது. கி.பி.8 ஆம் நூற்றாண்டு.

பொய்யாமொழிப் புலவர் = சோழநாட்டுத் துறையூரில் பிறந்தவர். தஞ்வாணன் மீது கோவை பாடி 400 பொன் தேங்காய்களைப் பெற்றவர். பல தனிப்பாடல்களைப் பாடியவர். இவர் சிவபெருமானிடத்தில் பேரன்புஉடையவர். இவர் திருவாயால் ஒரு பாடலைப் பெற விரும்பிய முருகப் பெருமான் இவரைப் பாடும்படி வேண்டிய போது, "கோழியைப் பாடிய வாயால் அதன் குஞ்சைப் பாடேன்" என்று கூறிய அத்துணை மனஉரம் படைத்தவர். என்றாலும் தமக்குப் புலவர் என்ற பட்டம் தகாது என்பதை, "அறம் உரைத்தானும் புலவன், முப்பாலின் திறமுரைத்தானும் புலவன், தரணி பொறுக்குமோ யான் புலவன் என்றக்கால்" என்று கூறிய அத்துணை அடக்கமும் உடையவர். கி.பி.13ஆம் நூற்றாண்டு.

போ

போப்பையர் = இவர் மேனாட்டு அறிஞர். நம் நாட்டிற்கு வந்து தமிழ்மொழி பயின்று தமிழ்மொழிக்குப் பெருந்தொண்டு புரிந்தவர். "தமிழர்கள் ஒழுக்கத்தில் தலைசிறந்தவர்கள். இப்படிக்