பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய

625

ஸ்ரீலஸ்ரீ காசிவாசி


ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞான சம்ந்த பரமாசாரிய சுவாமிகள் = இவர்கள் திருத்தருமை ஆதினத்து 25-வது குருமகா சந்நிதானமாக இருந்து கொண்டு அருட் செங்கோல் செலுத்தி வருபவர். இவர் ஆட்சியை மேற்கொண்ட பிறகு சமயப் பிரசாரத்திற்காகப் பல தொண்டுகளைச் செய்துவருபவர். சென்னையில் இதற்காகப் பெருங்கட்டடம் ஒன்றை அமைத்து நூல்நிலையம், சமயவகுப்பு வித்துவான் வகுப்பு, சமயச் சொற்பொழிவு முதலானவை நடத்த ஏற்பாடு செய்துவருபவர். மாநாடு, நடத்தி அதன் மூலம் சமயச் சொற்பொழிவுகள், இலக்கியச் சொற்பொழிவுகள் முதலானவற்றைத் தக்க அறிஞர்களைக் கொண்டு நடத்திச் சன்மானங்களை தந்து வருபவர். இவரது ஆட்சிக் காலத்தில் வெளிவந்த நூற்கள் பல. அவற்றுள் சிறப்பு முறையில் குறிப்பிடத்தக்கவை திருக்குறள் வளம், முதல் மூன்று திருமுறைகளின் குறிப்புரைகள் என்பன. இவர் அவ்வப்போது ஆற்றிய ஆசி உரைகள் இது போது "செந்தமிழ்ச் செல்வம்" என்ற பெயரால் வெளிவந்துள்ளது. இந்நூல் வாயிலாகக் குருமகா சந்நிதானம் அவர்கள் சைவசித்தாந்தக் கருத்துக்களை வாரி வழங்கி இருக்கிறார். இதன் மூலம் குருமகா சந்நிதானத்தின் பரந்த நூற்புலமையை நன்கு அறிந்து கொள்ளலாம். கி.பி. 20ஆம் நூற்றாண்டு.

ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருணந்தி தம்பிரான் சுவாமிகள் = இவரே திருப்பனந்தாள் திருமடத்து எஜமான் சுவாமிகள். தமிழ் மொழியிலும் ஆங்கில மொழியிலும் நல்ல அறிவு பெற்றவர். தமிழ் மொழியும் சைவ இலக்கியங்களும் நாட்டில் பரவ வாரி| இறைத்திருக்கும் தொகைக்கு அளவே இல்லை. இவர்களின் திருவருள் காரணமாகச் சைவத் திருமுறைகளும் மற்றும் பல நூல்களும் வெளிவந்துள்ளன. அவற்றைத் தக்கார்க்கு இலவசமாக வழங்கிக்கொண்டு வருகிறார். இவர் செய்துவரும் அரும் பெருந்தொண்டு