பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாதுரை

628

அருணகிரிநாதர்


உணவு கேட்ட போது, 'பரதேசிகளுக்கு உணவு இடும் ஆஸ்ரமம் இது அன்று' என்று கூறி விரட்ட, இதனை உணர்ந்த ஸ்ரீ ரமணரிஷி எவரும் அறியாது ஆஸ்ரமத்தை விட்டு வெளியே போய் ஒரு மரத்தடியில் அமர்ந்துவிட, ஆஸ்ரமத்து அன்பர்கள் ஓடிச்சென்று அவரை அழைத்தபோது, "நானும் ஒரு பரதேசி. எனக்கு மட்டும் ஆஸ்ரமத்தில் எப்படி உணவு கொடுக்கலாம்? ஆகவே நான் வெளியே வந்துவிட்டேன்" என்று கூறி ஆஸ்ரமத்தார் போக்கைக் கண்டித்துப் புத்திவரச் செய்த புண்ணியவான். இவரது அனுபவ உபதேசங்களை திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்கள் இவரைப்பற்றி எழுதியுள்ள நூலில் காணலாம். கி.பி.20ஆம் நூற்றாண்டு.

அண்ணாதுரை இவரை அறிஞர் அண்ணா என்றும், அடுக்கு மொழி அண்ணாதுரை என்றும் கூறுவர். நல்ல எழுத்தாளரும், பேச்சாளரும் ஆவார். ஆங்கிலத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். வள்ளுவர் கூறிய "கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்" என்பதற்கு இணங்கப் பேசும் பேராற்றல் படைத்தவர். பல நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார். சீர்திருத்த நோக்குடையவர். கி.பி.20 ஆம் நூற்றாண்டு.

அப்ளாசாரியார் இவர் தூத்துக்குடி வா.வு சிதம்பரம்பிள்ளை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி முதல்வராக இருந்து வருபவர். எம்.ஏ. பட்டம் பெற்றவர். உளநூல் புலமை வாய்ந்தவர். அது சம்பந்தமாக பல நூல்களைத் தமிழில் எழுதியவர். கி.பி.20 ஆம் நூற்றாண்டு.

அருணகிரிநாதர் எஸ்.எஸ். இவர் சென்னைத் தொண்டை மண்டல உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தவர். பல ஆங்கில நூல்களைத் தமிழ்ப்படுத்தியவர். எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். சிறுவர்கட்கேற்ற சிறுகதைகளை எழுதுவதில் வல்லுநர். கி.பி.20 ஆம் நூற்றாண்டு.