பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவிந்தராஜ முதலியார்

634

சண்முகஞ் செட்டியார்


மரபினர். கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.

கோ

கோவிந்தராஜ முதலியார் கா.ரா. = வைஷ்ணவ மரபினர். சென்னைப் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்தவர். இலக்கண அறிவுமிக்கவர். பல உரை நடை நூல்களை எழுதியவர். பதினெண் கீழ்க்கணக்கு நூற்கள் சிலவற்றிற்கு உரை எழுதியவர். உரைநடையில் எழுதியுள்ள நூற்களுள் சங்க நூற்கள் என்னும் நூல் ஆராய்ச்சிக்குத் துணை செய்யவல்லது. கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.

சகந்நாதய்யர் கி. வா. = இவர் டாக்டர் சுவாமிநாதய்யரின் தலை சிறந்த மாணவர். வித்துவான், எம்.ஏ. பட்டங்களைப் பெற்றவர். நல்ல பேச்சாளர். சங்க இலக்கியச் சார்பாகவும் சைவத் திருமுறைகளின் சார்பாகவும் உரைநடை நூல்கள் பல எழுதியவர். கலைமகள் என்னும் பத்திரிகையின் தலைமை பத்திராதிபராக இன்றும் இருந்து வருபவர். அவ்வப்போது பல பத்திரிகைகளில் சுவைமிக்க கட்டுரைகளை எழுதிவருபவர். கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.

சகவீர பாண்டியர் = இவர் தூத்துக்குடியைச் சார்ந்தவர். திருக்குறட் பாக்களை இணைத்துக் குமரேச வெண்பா என்னும் நூலை எழுதியவர் கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.

சச்சிதானந்தம் பிள்ளை. எஸ் . = இவர் சென்னைக் கல்வித்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று இருப்பவர். பி.ஏ.எல்.டி. பட்டம் பெற்றவர். இவர் தொழிலில் ஈடுபட்டிருந்தபோதே சமய வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டு ஆங்காங்குச் சொற்பொழிவு ஆற்றியவர். இப்போது ஆங்காங்கு நடைபெற்று வரும் வார வழிபாட்டிற்கு வழிகாட்டியாய் நின்றவர் இவரே. இவர் எழுதிய நூல்களுள் சிவசின்னங்கள் அணிவதேன்? என்பதும் ஒன்று. கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.

சண்முகஞ் செட்டியார் = சர்.ஆர்.கே. என்றதும் இவரை நன்கு அறிவர்,