பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/641

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோமசுந்தரம்பிள்ளை

641

தண்டபாணி தேசிகர்


சோமசுந்தரம் பிள்ளை = இவர் பி.ஏ.பி.எல். பட்டம் பெற்றவர். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பதிப்பாசிரியராக இருந்து வருபவர். தமிழ்ப்புலமை மிக்கவர். இவர் தேவாலயங்கட்கு ஆட்சித் தலைவராக இருந்தபோது, அவ்வத் தலங்களைப்பற்றி நூல்களை எழுதி வெளியிட்டவர். கல்வெட்டுக்களை ஆய்வதில் பெருவிருப்புடையவர். தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தைப்பற்றிச் சிறந்த முறையில் நூல் எழுதியவர். அண்மையில் நல்லசாமிப் பிள்ளை எழுதிய ஆங்கிலப் பெரியபுராணத்தைச் சீரிய முறையில் பதிப்பித்து வெளியிட்டவர். கி.பி. 20ஆம் நூற்றாண்டு. தமிழ்இசைச் சங்கத்திலும் தொண்டு புரிந்தவர்.

ஞா

ஞானசம்பந்தம். சா. = இவர் சென்னையில் உள்ள அகில இந்திய ஒலிபரப்பும் நிலையத்தில் நாடகங்களை ஒழுங்குபடுத்தி ஒலிபரப்புதல் மூலம் வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளார். எம்.ஏ. பட்டம் பெற்றவர். உரைநடை எழுதும் வன்மை வாய்ந்தவர். அவர்கள் எழுதிய நூற்களுள் ராவணன் மாட்சியும் வீட்சியும் என்பதும் ஒன்று. கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.

தண்டபாணி தேசிகர் = இவர் வித்துவான் பட்டம் பெற்றவர். இவர் தருமை ஆதினத் தொடர்பும், திருவாவடுதுறை ஆதினத்தொடர்பும் பெற்றுத் திகழ்பவர். இவர் தருமபுர ஆதீனத் தொடர்பில் நெருங்கித் தொண்டாற்றிய போது, திருக்குறள் வளம் என்னும் நூலையும், சம்பந்தரது முதல் திருமுறைக்குக் குறிப்புரையையும் அரிதின் முயன்று எழுதி குருமகா சந்நிதானத்தின் திருவருள் பெற்றுப் பதிப்பித்தவர். திருவாவடுதுறை ஆதினத் தொடர்பு பெற்றபின் விநாயகரைப் பற்றிய அரிய நூலை எழுதித் திருவாவடுதுறை ஆதின குருமகா சந்நிதானத்தின் திருவருள் துணையால் பதிப்பித்தவர். இது போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்