பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணலிங்கம் பிள்ளை

646

மஜீத்


உள்ளபடி கூறுபவர் என்பதை இவரது அறுபதாம் ஆண்டு நிறைவு விழா நடந்த நாளில் இவரால் எழுதி வெளியிடப்பட்ட இவரது வாழ்க்கை வரலாற்றுத் தனி நூலால் நன்கு உணரலாம். கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.

பூ

பூரணலிங்கம் பிள்ளை எம்.எஸ். = திருநெல்வேலியைச் சார்ந்தவர். எம்.ஏ. பி.எல். பட்டம் பெற்றவர். ஞானபோதினி என்னும் பத்திரிகையின் தலைவராக இருந்தவர். ஆங்கிலத்தில் தமிழ் இலக்கியங்களைப் பற்றியும் புலவர்களைப் பற்றியும் ஒரு நூல் எழுதியவர். கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.

பெ

பெரியசாமித் தூரன் = இவர் பி.ஏ. எல்.டி. பட்டம் பெற்றவர். சைவ சமயத்தினர். நன்கு எழுதும் திறனும் பேசும் திறனும் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத் தொடர்பு கொண்டு, கலைக்களஞ்சியம் என்னும் நூலை வெளியிடுவதில் தலைமைபூண்டு அதனைச் செவ்வனே நடத்தி வருபவர். இதுவரையில் நான்கு வால்யூம்களை வெளியிட்டுள்ளார். இவர் சுப்பிரமணிய பாரதியார் சுதேசமித்திரனில் எழுதிய கட்டுரைகளை ஒருங்கு சேர்த்து வெளியிட்டிருப்பது தமிழ் மொழிக்கு ஆக்கம் தருவதாகும். இவர் ஆண்டு மலர்களிலும் திங்கள் தாள்களிலும் பல கட்டுரைகளையும், தமிழ்இசைச் சங்கச் சார்பில் பண்ணைப் பற்றி ஆய்ந்து எழுதிய கட்டுரையும் எழுதியுள்ளவர். பல உரைநடை நூற்களின் ஆசிரியர். கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.

மஜித் எம்.எஸ்.எ. = இவரை அப்துல் மஜீத் என்று அனைவரும் அழைப்பர். இவர் பி.ஏ. பட்டம் பெற்றவர். முஸ்லீம் மரபினர். தமிழிலும் ஆங்கிலத்திலும் அழகாகப் பேசும் திறன் படைத்தவர். இது போது தென்னிந்திய முஸ்லீம் கல்விச் சங்கச் செயலாளராக இருந்து சிறப்பாக முஸ்லீம் இனத்தவருக்கும், பொதுவாகத் தமிழுக்