பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/648

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை

648

முத்து சு. மாணிக்க


வேதாந்த சித்தாந்த தருக்கங்களில் அறிவு வாய்ந்தவர். பாடஞ் சொல்வதே பெருந்தொண்டாகக் கொண்டவர். இக் காலத்தில் இவரது அருந் தொண்டினால் எம்.ஏ. பட்டமும், வித்துவான் பட்டமும் பெற்றுத் திகழ்பவர் பலர். பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். இவர் எழுதிய கட்டுரைகள் பல நூல் வடிவமாக வந்துள்ளன. அவற்றுள் சேக்கிழாரும் கண்ணப்பரும், நாடும் காமமும், ஒப்பிலக்கணம் முதலானவை. குறிப்பிடத்தக்கன. கி.பி. 20ஆம் நூற்றாண்டு.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை த.ச. = இவர் வித்துவான் பட்டம் பெற்றவர். சமய நூல்களை நன்கு கற்றவர். இது போது திருவாவடுதுறை ஆதின வித்துவானாக இருந்து கொண்டு, அவ்வாதீன வெளியீடாக வெளிவரும் நூற்கள் யாவற்றையும் நன்கு பரிசோதித்துத் தக்க முகவுரைகளை எழுதி வெளியிட்டு வருபவர். விநாயகர் அகவலுக்கு உரையும் எழுதியவர். கி.பி.20ஆம் நூற்றாண்டு.

முத்துக்குமாரசாமி முதலியார் = இவரை மயிலை சிவமுத்து என்றால் எவரும் அறிவர். இவர் தமிழ் ஆசிரியர் பணியைப் பல்லாண்டு மேற்கொண்டு, இது போது ஓய்வு பெற்றுள்ளவர்.தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் ஓயாமல் உழைத்து வருபவர். மாணவர் மன்றத்தின் உயிர்நாடி இவரே ஆவர். சைவ சமயத்தவர். சீர்திருத்தக்காரர். நல்ல கூரிய அறிவு படைத்தவர். உரைநடை எழுதுவதில் வல்லவர். கற்பனைகளும் நல்ல கருத்துக்களும் அடங்கிய சிறுகதைகளையும் உரைநடை நூல்களையும் பல எழுதியுள்ளவர். நல்ல எறும்பு, திருமணம் முதலானவை இவர் எழுதிய நூற்கள். கி.பி.20 ஆம் நூற்றாண்டு.

முத்து சு. மாணிக்கவாசக முதலியார் = இவர் வித்துவான் பட்டம் பெற்றவர். சைவசித்தாந்த ரத்னாகரம் என்ற பட்டமும் பெற்றவர். சிறந்த சைவசித்தாந்த சாத்திரப்