பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/650

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வரதராஜனார்

650

வன்மீகநாதப்பிள்ளை


ஜிகல் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழ் ஆசிரியராக இருந்தவர். சைவ சமயத்தவர். இவருக்கு இருக்கும் பரந்த அறிவு ஆராய்ச்சியினை இவர் பதிப்பித்து வெளியிட்டுள்ள திருக்குறள் பரிமேலழகர் உரையால் அறியலாம். சிவஞான போதத்தையும் பதிப்பித்து வெளியிட்டவர். கி.பி. 20ஆம் நூற்றாண்டு.

வரதராஜனார். மு. = இவர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து தொண்டு புரிபவர். டாக்டர், எம்.ஓ.எல்.எம்.ஏ. வித்துவான் முதலான பட்டங்களைப் பெற்றவர். மூ. வ. என்றதும் எவரும் அறிந்து கொள்ளத் தக்க முறையில் புகழ் பெற்றவர். நவீன முறையில் நூல்களை எழுதும் ஆற்றல் படைத்தவர். கள்ளோ காவியமோ, தமிழர் நெஞ்சம் என்பன அவற்றுள் சில. கி.பி. இருபதாம் நூற்றாண்டு.

வன்மீகநாதப்பிள்ளை = இவர் திரிசிரபுரத்தில் பிறந்து வளர்ந்து புது டில்லியில் மத்திய அரசாங்க அலுவலகத்தில் பல்லாண்டு தொண்டு புரிந்து உபகாரச் சம்பளம் பெற்று இது போது டெல்லி கிளாத் மில்லில் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீசராக இருந்து கொண்டு சிறந்த முறையில் வாழ்ந்து வருபவர். பி.ஏ. பட்டமும், ராவ்சாகிப் பட்டமும் பெற்றவர். ஜி. வி. பிள்ளை என்றதும் புதுடெல்லியில் இவரை அறியாதவர் இலர். தமிழ் மொழியில் நல்லறிவு படைத்தவர். டில்லியில் ஓய்ந்த நேரங்களில் தமிழ் நூல்களைப் பாடஞ் சொல்லி வருபவ்ர். தென்னாட்டிலிருந்து டெல்லிக்குச்செல்லும் தமிழர்கட்கு வேண்டிய அளவுக்கு உபசாரம் செய்து அனுப்புபவர். பூசைக்குரிய பாடல்கள் அடங்கிய நூலைப் புற்றன் என்ற பெயரால் வெளியிட்டவர். பல கட்டுரைகளை எழுதியும் வெளியிட்டுள்ளார். அவை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. இவர் மாணிக்கவாசகரைப் பற்றியும் திருவாககத்தைப் பற்றியும், கம்பராமாயணத்தைப் பற்றியும் எழுதியுள்ள கட்டுரைகள் சிறப்புவகையில் குறிப்பிடத்தக்கவை.