பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அசம்

4

அச்சுவினி தேவதைகள்



அசம் = ஆடு, பிறப்பில்லாதது, ஆன்மா
அசம்பிரேட்சிதம் = ஆராய்ச்சி இல்லாமை
அசரம் = அசைவில்லாதது
அசரீரி = ஆகாயவாணி, உடல் இல்லாதது
அசலம் = மலை, அசையாநிலை
அசல் = அருகு, கொசுகு, சிலை, பூமி, மூலம்
அசவல் = சேறு, கொசுகு
அசனம் = போசனம், வேங்கை மரம்
அசனி = இடி, வச்சிராயுதம்
அசன் = பிரமன்
அசா = தளர்ச்சி, வருத்தம், விருப்பம்
அசாதசத்துரு = தருமபுத்திரன், தனக்குப் பகைவர் இல்லாதவன்
அசாவாமை = தளர்ச்சியடையாமை
அசி = வாள்
அசிதம் = கருமை, ஒரு சிவாகமம்
அசினம் = விலங்கின்தோல், தோல்
அசுணமா = இசையறியும் விலங்கு
அசும்பு = அசைவு, சிறுதிவலை, நீர் அறாக் குழி, ஊற்று, கிணறு, வழுக்கு நிலம், சேறு, பற்று, குற்றம்
அசுரகுரு = சுக்கிராசாரியார்
அசுரம் = எண்வகை மணத்தில் ஒன்று, வீரச்செயல் புரிந்து மணத்தல்
அசுரர் = இராக்கதர்
அசுவதாட்டி = குதிரையின் வேகம்
அசுவத்தம் = அரச மரம், அத்தி மரம்
அசுவம் = குதிரை
அசுழம் = நாய்
அசூயை = பொறாமை
அசேதனம் = அறிவில்லாதது
அசைதல் = வருந்துதல், கட்டுதல், கலங்குதல், தளர்தல்
அசைவு = சோர்வு, இளைப்பு, ஆட்டம், வருத்தம்
அச்சன் = தந்தை
அச்சு = உயிர் எழுத்து, வருத்தம், வலி, உடல், அடையாளம்
அச்சுதன் = திருமால், அழிவில்லாதவன்
அச்சுவினி தேவதைகள் = தேவ வைத்தியர்