பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒள்ளியர்

95

ஒஃகுதல்


ஒள்ளியர் = அறிவுடையோர், குற்றமற்றவர்
ஒறுத்தல் = தண்டித்தல், வருத்துதல், வெறுத்தல், கடிதல், இகழ்தல், அழித்தல், நீக்கல், குறைத்தல்
ஒறுப்பு = தண்டனை, கடிந்து பேசுதல், வெறுப்பு
ஒறுவாய் = ஒடிந்தவாய்
ஒறுவு = வருத்தம்
ஒற்கம் = அடக்கம், வறுமை, தளர்வு, குறைவு, நரகம்
ஒற்றி = உரிமை அடமானம்
ஒற்றித்தல் = ஒற்றையாய் இருத்தல், ஒற்றுமையாய் இருத்தல்
ஒற்று = உளவு பார்ப்பவன், மெய்யெழுத்து, ஒற்றடம்
ஒற்றுதல் = ஆராய்தல், தாங்குதல், தள்ளுதல், தீண்டுதல், அடுத்தல், அடித்தல், தழுவுதல், வீழ்த்துதல், விலகுதல், தத்துதல், உளவறிதல், மறைதல், உய்த்துணர்தல், மோதுதல், காற்று வீசுதல், துடைத்தல்
ஒற்றை = ஒருவாத்தியம், தனிமை, ஒப்பின்மை
ஒன்பதின்மர் = ஒன்பதுபேர்
ஒன்பான் = ஒன்பது
ஒன்றலர் = பகைவர்
ஒன்றல் = பொருந்துதல்
ஒன்றாமை = பகைமை
ஒன்றார் = பகைவர்
ஒன்று = முத்தி, செல்வம், வாய்மை, தனிமை, அறம், எண், மதிப்புக்குரிய பொருள்
ஒன்றுதல் = பொருந்துதல், கூடுதல், நிலை பெறுதல், கலத்தல், இடைவிடா திருத்தல்
ஒன்றுநர் = நண்பர்
ஒன்னலர் = பகைவர்
ஒன்னா = பொருந்தாத
ஒன்னாதார் = பகைவர்
ஒன்னார் = பகைவர்
ஒஃகுதல் = குறைதல், ஒதுங்குதல், பின்வாங்குதல்