பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவர் காலம்

139

பல்லவர் காலம் 139 புராணம், (10) யசோதர காவியம் என்பவை. (இந்நூல் களைப் பற்றிய செய்தியினைச் சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம் என்னும் தலைப்புகளிற் காண்க.) உரைநடை நூல்கள் ஸ்ரீ புராணமும் கத்திய சிந்தாமணியும் மணிப்பிரவாள நடையில் அமைந்த நூல்கள். நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு சமண சமயத்தவர் செய்ததே. இலக்கண நூல்கள் (1) யாப்பதிகாரம், (2) அவிநயம், (3) யாப்பருங்கலம், (4) நன்னூல், (5) நம்பியகப் பொருள், (6) வீர சோழியம், (இந்நூல்கள் பற்றிய விளக்கத்தினைப் பின்வரும் சோழர் காலம், நாயக்கர் காலம் என்ற தலைப்புகளிற் காண்க.) உரை நூல்கள் (1) இளம்பூரணர் உரை, (2) நேமிநாதம் (3) அடியார்க்கு நல்லார் உரை. பிற நூல்கள் நெல் இலக்க வாய்பாடு, சிறுகுழி வாய்பாடு (கணித நூல்கள்), சினேந்திர மாலை (சோதிட நூல்), வான நூல் முதலியன. இவ்வாறு சமண சமயப் புலவர் பல துறைகளிலும் நூல்கள் பலவற்றை எழுதித் தமிழ் மொழிக்குச் சிறந்த ' தொண்டாற்றியுள்ளனர்.