பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

தமிழ் வளர்த்த நகரங்கள்


செட்டியாரும், பேராசிரியர் கோ. சுப்பிரமணியபிள்ளை யுமேயாவர். இத்துறையினைப் போன்றே பிற கலைத் துறைகளையும் தக்க பேரறிஞர்களைக்கொண்டு மிக்க சிறப்பாக வளர்த்து வருகிறது.

இவ்வாறு பதினேந்து நூற்றாண்டுகளாகச் சைவத் தமிழையே வளர்த்து வந்த தெய்வத் தலமாகிய தில்லைமாககரம் இந்த நூற்றாண்டில் தமிழின் பல துறைகளையும் நலம்பெற வளர்த்து வருகிறது. இலக்கியம், சமயம், தத்துவம், இசை முதலிய பல துறைகளிலும் தமிழறிஞர் பலர் இருந்து அரும்பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களை உருவாக்கித் தந்து, நாடெங்கும் நற்றமிழ் வளர்தற்கு உற்ற துணையாக ஒளிர்கின்றது. ஆதலின் தில்லைமாககரம் என்றும் தமிழ் வளர்க்கும் தனிப்பெருநகரமாக நின்று நிலவுகின்றது.