பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11



தேர்ச்சி பெற்றவன்' என்று தனது புலமையைப் பெருமையோடு கூறினாள் கண்ணகி.

'இன்னும் ஆம பாகம், ஊம பாகம், ஒம பாகம் என்று நீ கேள்விப்பட்டதுண்டா?”

'என்னடா, அரிச்சுவடியைத் தப்பாக ஒப்பிக் கிறாய். மதுரை, தமிழ்ச் சங்கத்திற்குப் பேர். போனதாயிற்றே! இன்னும் அ, இ, உ என்றெல்லாம் வரிசையாக வருமே" என்று நகைத்தாள் கண்ணகி.

இவர்கள் சளைக்காமல் போட்டி போட்டுக் கொண்டு பேசுவதை மிகவும் ரசித்துக்கொண்டே வந்தாள்கண்ணகியின் தாயார் வள்ளிநாயகி.

சுந்தரத்திற்கு வயது பதினொன்று இருக்கும். பேராசிரியர் வடிவேலுவின் தங்கையின் மகன். அவன் மதுரையில் ஒர் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிருன். ஒவ்வோர் ஆண்டிலும் கோடை விடுமுறையின்போது சென்னை வருவதை வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறான். கண்ணகியைக் கேலி செய்வதிலேயும் பொதுவாக நகைச்சுவையோடு பேசுவதிலும் வல்லவன். சுந்தரம் இருக்குமிடத்தில் எப்பொழுதும் கேலியும் சிரிப்பும்தான்.

கண்ணகிக்குச் சுமார் பத்து வயது இருக்கும். என்றாலும் சமையல் செய்வதில் மிகவும் ஆர்வம்