பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19



'அந்தக் குரங்கு இல்லாவிட்டால் இந்தக் குரங்கும் வராதே, என்ன செய்வது?’ என்று தங்க மணியைப் பார்த்து நகைத்தான் சுந்தரம்.

'அப்பா, பயணத்தை வேண்டுமானல் ரத்து செய்துவிடலாம்' என்று தங்கமணி சொல்லி முடிப் பதற்குள், 'அண்ணனும் வரமாட்டான் நானும் வரப்போவதில்லை' என்றாள் க ண் ண கி. "அப்பொழுது நானும் வரப்போவதில்லை' என்று கூறினான் சுந்தரம். இவ்வாறு ஒரேயடியாக மூவரும் ஒருமனதாகத் தங்கள் நிலைமையைத் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

ஆனால் வடிவேலு, ஜின்காவைத் தங்கமணி எப்படிப் பழக்கப்படுத்தியிருக்கிறான் என்பதையும், அது லபவீரச் செயல்கள் புரிந்திருப்பதையும், ஜின்கா வினால் மற்றைய பயணிகளுக்குத் தீங்கு விளையாது என்றும் தெளிவாக எடுத்துரைத்தார். கடைசியில், ஒட்டுநரோடு கலந்து நீண்டநேரம் உரையாடிய பின்பு

கண்டக்டர் அரைமனதாக அதை ஏற்றிக்கொள்ள ஒப்புக்கொண்டார்.

'வழியில் ஏதாவது குரங்கு சேஷ்டை செய்தால் உடனே அதை இறக்கி விட்டுவிடுவேன்' என்ற எச்சரிக்கையோடும் என்ன நேருமோ என்று கலவரத் தோடும் கண்டக்டர் ஒப்புக்கொண்டார். எடுத்த எடுப்பிலேயே இந்தப்பயணம் ரத்தாகிவிடுமோ என்ற எழுந்த பயம் ஒருவாறு நீங்கியது.