பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26



'டேய், நமக்கு நிறைய வேலையிருக்கிறது என்று உலோகக் கண்டுபிடிப்பான் சொல்லுகிறது. அந்த உலோகம் எங்கிருக்கிறது, எப்படிக் கண்டுபிடிப்பது என்பதைத்தான் ஆராய்ச்சி செய்யவேண்டும்' என்றான் தங்கமணி.

'வந்ததும் ஆரம்பித்துவிட்டாயா? ஒரு நாள் பொறுத்து அத்தையினுடைய செளகரியத்தை யெல்லாம் கவனித்துக்கொண்டு, பிறகு தொடங்காலமே?” என்றான் சுந்தரம்.

"அதையெல்லாம் சப் இன்ஸ்பெக்டர் கவனித்துக் கொள்வார். அவர் நமக்குக் கிடைத்த நல்ல நண்பர். நமக்கும் நிறைய வேலையிருக்கிறது என்று தோன்று கிறது. வீண் காலதாமதப்பட்டுப் பயனில்லை' என்றான் தங்கமணி.

'சரி, நீ பிடித்தால் ஜின்கா பிடிதானே? இதில் நீ எந்த வகையில் என் உதவியை எதிர்பார்க்கிறாய்?" என்று கேட்டான் சுந்தரம்.

தங்கமணி முதலில் ராஜ வீதி, ராணி வீதி, தளகர்த்தர் வீதி எல்லாம் ஆராய்ந்துவிட்டு, 'உப்பனாறு என்ற குறுகிய ஆற்றைப் பார்க்க வேண்டும். அதில்தான் டேனிஷ் பிரபு மரியம்மை கோயிலுக்குத் தினமும் படகில் ஏறி வருவாராம். அதை ஆராய வேண்டும்" என்று ஆழ்ந்த யோசனையோடு கூறினான் தங்கமணி. அங்குள்ள வீதிகளின்