பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28



அந்த இடத்தில் நல்ல தண்ணிர் கிடைப்பது ஒர் அதிசயந்தான்.

'கண்ணகி, ஒரு எக்ஸ்டிரா டிபன் தரமுடியுமா?" என்று கேட்டான் சுந்தரம்.

"நீதான் சாப்பாட்டு ராமனயிற்றே! அதற்காகவே அம்மாவும் அதிகமாகத் தயார் பண்ணியிருக் கிறார்கள்' என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்தாள் கண்ணகி.

'இல்லை, ஏதோ கடப்பாரையைக் கொண்டு இடி இடியென்று இடிக்க வேண்டுமாம். அதைச் சமாளிக்கத்தான் கேட்டேன். நினைத்தாலே பசி எடுக்கிறது' என்று நகைத்தான் சுந்தரம்.