பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கண்ணகியைக்காணுேம்



வீட்டிற்குத் திரும்பும்போது மற்றேர் அதிர்ச்சி காத்திருந்தது. கண்ணகி திடீரென்று மறைந்துவிட்டாள். எவ்விடத்தில் தேடிப் பார்த்தும் அகப்படவில்லை.

தங்கமணி உடனே கண்ணகியைக் கண்டு பிடிப்பதில் வேகமாக முனைந்தான்.

"சுந்தரம், நீ இந்த ஆராய்ச்சியைப்பற்றி வெளியில் யாரிடமாவது பேசிக்கொண்டு இருந்தாயா?" என்று கேட்டான் தங்கமணி.

சுந்தரம் சற்று நேரம் யோசித்துப் பார்த்துவிட்டு, "நான் யாரிடமும் இது பற்றிப் பேசவில்லை. ஆனால் கண்ணகியிடம், இன்னும் ஒருநாளில் புதையலைக் கண்டுபிடித்துவிடுவோம்’ என்று ஒரு புதர் மறைவில் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தேன்' என்று தெரிவித்தான்.