பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஒழுகை மங்கலம் மாரியம்மன் திருவிழா



ல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு டேனிஷ் துரை இருந்தார். அவர் மிகுந்த கடவுள் பக்தி உடையவர். காலை மாலை இரண்டு வேளையும் தவறாது பிரார்த்தனை செய்வார். புதிதாக இங்கு வந்த இடத்தில் அவ்வாறு பிரார்த்தனை செய்வதற்கு வசதியில்லை. ஆகையால், புனித மரியம்மையின் சிலை ஒன்றுக்கு ஏற்பாடு செய்து, அதைத் தரங்கம்பாடிக் கோட்டையிலிருந்த மாதா கோயிலில் நாட்டிப் பிரார்த்தனை புரியலானர். அவர் வசித்த இடத்திற்கும் தரங்கம் பாடிக் கோட்டைக்கும் இடையே உப்பனாறு என்ற ஒரு சிறிய ஆறு ஒடுகின்றது. அந்த ஆற்றின் தண்ணிரைக் கொண்டு விவசாயம் எதுவும் செய்ய முடியாது. அப்படி உப்பாக இருந்தது அந்த உப்பனாறு. டேனிஷ் துரை வசிக்குமிடத்துக்கும் மாதா கோயிலுக்கும் இடையே உப்பனாறு ஒடுவதால், தோணி மூலம் இரண்டு வேளையும் ஆற்றைக் கடக்க ஏற்பாடு