பக்கம்:தரங்கிணி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

1 11

நான் உன் விருப்பத்துக்கும் செளகரியத்துக்கும் மாருக உன்னை வற்புறுத்தவில்லை...' என்ருள்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை.

"பின்னே? அண்ணனுக்கு இன்னும் கலியாணமாக வில்லை. வீட்டில் வயது வந்த சகோதரி யொருத்தி கலியாணத்துக்குக் காத்திருக்கிருள். அப்படியிருக்க, நான் எப்படிக் கலியாணஞ் செய்துகொள்ள முடியும் என்று யோசிக்கிருயா?...”

ஜோஸப் உம் கொட்டினனே யொழிய, அவள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லை.

தரங்கிணி தொடர்ந்து பேசிள்ை: "தங்கராஜுக்கும் காதரீனுக்கும் கல்யாணம் ஆகும்வரை நான் காத்திருக் கிறேன். அவ்விருவருக்கும் கலியாணமான பின்னர், நாம் விவாகஞ் செய்துகொள்ளலாம். ஆனல் ஒன்று, அதுவரை நான் உங்கள் வீட்டில் காதரீனுடன் இருக்க உன் பெற்ருே ரிடம் அனுமதி மட்டும் வாங்கித் தரவேண்டும்."

ஜோஸப் இப்போது பேசத் தொடங்கினன்: அப்படி யெல்லாம் நீ காத்திருக்க வேண்டியதில்லை. நான் என் பெற்ருேளிடம் இவ்விஷயத்தைச் சொன்னல், நாளையே நமக்குக் கலியாணஞ் செய்து வைத்துவிடுவார்கள். உன்னைப்போன்ற அறிவுள்ளவளும் அழகானவளுமான பெண் தங்களுக்கு மருமகளாக வருவதை இரட்டிப்பு மகிழ்ச்சியோடு வரவேற்பார்கள். என் அம்மாவுக்கு உன் மீது உள்ள அன்பு அளவிட்டுச் சொல்லமுடியாது. அப்பா வும் உன்னிடம் அளவுகடந்த மதிப்பு வைத்திருக்கிருர், காதரீனைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. ஆருயிர்த் தோழியான நீ, அவளுக்கு அண்ணியாகவே வந்துவிட்டாய் என்று தெரிந்தால், ஆனந்தக் கூத்தாடுவாள்...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/112&oldid=1338528" இலிருந்து மீள்விக்கப்பட்டது