பக்கம்:தரங்கிணி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

113

ஜோஸப் வார்த்தையை முடிக்கும் முன்பே, தரங்கிணி குறுக்கிட்டு, ஜோஸப்! இதைக் கேள்; நீ எழுப்பியுள்ள விளுக்களுக்கும் ஐயங்களுக்கும் நான் பதில் சொல்லவும் தயாராக இல்லை: காரணகாரிய விளக்கங்கூறவும் விரும்ப வில்லை. ஆனால், நான் எதற்காகவோ பெற்றேருடன் சண்டை போட்டுக்கொண்டு, அந்த ஆத்திர உணர்ச்சியில் இம் முடிவுக்கு வந்திருப்பதாக நீ நினைப்பது மட்டும் சரி யல்ல. அவ்வளவுதான் நான் கூறமுடியும்' என்று கூறினுள். பின் அவன் உள்ளத்தை ஊடுருவிப் பார்ப்பதுபோல், கூர்ந்து நோக்கி, "என்னைக் கல்யாணஞ் செய்து கொள்ளச் சம்மதமா இல்லையா? அதை மட்டும் சொல்; நான் கேட்டு விட்டுப் போகிறேன்' என்று கண்டிப்பாகக் கேட்டாள்.

ஜோஸ்ப், தரங்கிணியை இரக்கத்தோடு பார்த்து, கோபித்துக் கொள்ளாதே, தரங்கிணி இனிமேல் நான் ஒன்றும் கேட்கமாட்டேன். இன்றிரவு அம்மா அப்பா விடம் இவ் விஷயத்தைத் தெரிவிக்கிறேன். அவர்கள் கட்டாயம் கலியானத்துக்கு ஏற்பாடு செய்வார்கள், சீக்கிரம்’ என்று, பற்று ஒட்டு இல்லாமல் பதில் சொன் ஞன.

தரங்கிணி, அப்போதிருந்த மனநிலையில், ஜோஸபின் பேச்சில் தொனித்த இதயபாவத்தைக் கவனிக்கவில்லை. "அப்ப, சரி; நான் போகிறேன். ஜோஸப் அடுத்தபடியாக நான் கலியாணத்தன்றுதான் உன்னைச் சந்திப்பேன். இதற்கிடையில் நீ என்னைக் கண்டுபேச முயலக்கூடாது. உன் தந்தை கலியாணத்துக்கு நாள்குறித்ததும், நீ காதரி னிடம் செய்தியைச் சொல்லி அனுப்பு. கலியாணத்துக்கு முன் நாள். நான், உங்கள் வீட்டுக்கு வந்து விடுகிறேன்" என்று கூறியவாறே, எழுந்திருக்கலானள்.

த-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/114&oldid=1338530" இலிருந்து மீள்விக்கப்பட்டது