உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தரங்கிணி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

126

டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டிடத்தின் முன் பகுதி யில் தன் சைக்கிளே நிறுத்திவிட்டு, அதைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த ஜோஸ்ப், இக்காட்சிகளையெல்லாம் கண்டு களித்துக் கொண்டிருந்தான். அவற்றுக்கிடையே அவன் கண்கள் எதிர் நடைபாதையிலிருந்து சாலையைக் கடந்து இப்பக்கம் வரும் ஆட்களை அடிக்கடி கவனிப்ப திலிருந்து, அவன் யாரையோ ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிருன் என்று தெரிந்தது. ஜோஸப் அங்கு நின்ற சில நிமிடநேரத்தில், பாரி முனையிலிருந்தும், தங்க சாலையிலிருந்தும், பழக்கடை பஸ் ஸ்டாண்டிலிருந்தும் வரும் பஸ்களும், பிளஷர் க்ார்களும், டாக்ஸி கார்களும், ஆட்டோ ரிக்ஷா, சைக்கிள் ரிக்ஷா, சைக்கிள்களும், குதிரை வண்டிகளும், ஆள் இழுத்துத் தள்ளிக்கொண்டு போகும் பார வண்டிகளும், வேகமாகவும் மெதுவாக வும் போய்க்கொண்டிருந்தன. பூக்கடை போலீஸ் ஸ்டேஷனைச் சேர்ந்தாற்போலுள்ள பிளஷர் கார் நிற்கும் வட்டத்தில், பல கார்கள் நிற்பதும். ஆண்களும் பெண்களுமாக இறங்குவதும், அவர்கள் வாங்கவேண்டிய துணிமணிகளையும் பழவகைகளையும் மற்றும் சாமான்களை யும் வாங்கிக்கொண்டு திரும்பிவந்து, தத்தம் கார்களில் ஏறிப் போவதுமாயிருந்தனர். அவ்விதம் போவதும் வருவது மாயிருக்கும் விதவிதமான மனிதர்களும், அவர்கள் தரித் திருந்த விதவிதமான அணிமணிகளும் ஜோஸப் கண் களுக்கு, தற்போதைய நவநாகரிகப் போக்கையும், மனிதர் களின் நடையுடை பாவனைகளையும் தெரிவித்து கொண்டி ருந்தன. - என்ன, இங்கே நின்று கொண்டிருக்கிருய், ஜோஸப்'

இக் குரல் கேட்டுத் திடுக்கிட்ட ஜோஸப், திரும்பிப் பார்த்தான். அவன் இதுவரை யார் வருகையை எதிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/127&oldid=1338543" இலிருந்து மீள்விக்கப்பட்டது