பக்கம்:தரங்கிணி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

முதலில் அவனைப் பார்த்ததும், இராத்திரி ஏன் வர வில்லை, ராஜர் பாங்கியில் ஏதாயினும்..." என்று கேட்டுக் கொண்டே வந்தவர், அவன் பின்னல் நிழல்போல் தொடர்ந்து வந்துகொண்டிருந்த தரங்கிணியைக் கண்டு விட்டு, வாயடைத்துப்போய் அயர்ந்து நின்று விட்டார்.

"அப்பா என்னை மன்னித்துவிடுங்கள், அப்பா!' என்றி கூறியவாறே, செனந்தரராஜன் தந்தையின் கால் களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்துவிட்டான். தரங் கிணியும் மண்டியிட்டு விழுந்து வணங்கினுள்.

இதற்குள், இராமகிருஷ்ணன் நிலைமையை ஒருவாறு புரிந்துகொண்டார். அவர் வெளியே நோக்கினர். இவர் களே ஏற்றி வந்த டாக்சி புறப்பட்டுப் போய்க்கொண் டிருந்தது. தங்கராஜ் மணமக்களுடன் இறங்கி க்கொண்டு, டாக்சியைச் சிறிதுதுாரம் கொண்டுபோய் நிறுத்தி வைத்தி ருக்கும்படி டிரைவரிடம் சமயோசித புத்தியுடன் சொல்லி யனுப்பினன். பின்னர், வெளிவாயில் கதவோரத்தில் ஒதுங்கி நின்று. உள்ளே என்ன நடக்கிறதென்று கவனித்துக் கொண்டிருந்தான்.

தகப்பனரின் பாதங்களில் விழுந்த செளந்தரராஜன் எழுந்திருக்கவேயில்லை. தரங்கிணிக்குத் தருமசங்கடமாகப் போய்விட்டது. நெடுநேரம் அவளால் மண்டியிட்டிருக்க முடியவில்லை. கணவன் எழுந்திருக்காமல் தான் எழுந்திருப் பதும் உசிதமாகத் தோன்றவில்லை. ... ." . * · ·५

"சரி, சரி எழுந்திருடா" என்று தம் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு சொன்ன இராமகிருஷ்ணன், தரங்கிணியைக் கூர்மையாகப் பார்த்துவிட்டு, யார் இது: அந்த மயிலாப்பூர் வாத்தியார் பெண்தானே!" என்று, பற்று ஒட்டு இல்லாததுபோல் கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/170&oldid=575366" இலிருந்து மீள்விக்கப்பட்டது