உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்கோ க்கம்பி 59 திரு தது

அடுத்து வரும் பாடல்களில் உலக மக்கள் வாழும் வாழ்க்கை முறையினை விளக்குகிறார் அடிகள். புலம்பு கின்ற பூதலம்’, பித்த உலகு என இரண்டு பாடல்களிலும் குறிக்கின்றார். மெய்த்தேவனாகிய இறைவனை விட்டு, யார் யாரையோ பொய்த்தேவு பேசி உலகம் புலம்புகின்றது என்கிறார்; அதே வேளையில் சுற்றம், குலம், கல்வி என்று திரியும் உலகினைப் பித்த உலகு என்கிறார். இவை இரண்டும் உயிர்களை இறைவனிடம் ஒன்றாது தடை செய்யும் தன்மையன என்பது உண்ம்ையன்றோ !

சிலருக்கு மணிவாசகர் கல்வி யினையும் பிறவற்றோடு சேர்த்துவிட்டாரே எனத் தோன்றும். உண்மையில் மணி வாசகர் இறையுணர்வு நல்கும் கல்வியினைப் போற்றத் தவறவில்லை. ஆனால் கல்லாதனவற்றைக் கற்று அதனால் கல்வி ஆங்காரம் கொண்டு திரியும் சமூகத்தினையே அவர் சாடி, கற்பனவும் இனி அமையும் என்றும் கற்றாரை யான் வேண்டேன்’ என்றும் கூறுகின்றார். இன்று உலகில் நடக்கும் எத்தனையோ போராட்டங்களும் மாறாட்டங்களும் ஏன்?-பெரும் போர்களும் கற்றவர் எனப்படுவார் வழியே நடைபெறுவதை நாம் காண் கின்றோமே. கல்வியற்ற ஏழை மக்கள் எங்கோ கடமை களைச் செய்துகொண்டிருக்க, கற்றவர் எனத் தம்மைக் கூறிக் கொள்வேரே, கொள்கை மறந்து கொடுமை நினைத்து மற்றவர் வருந்தத் தாம் வாழும் ஆடம்பர வாழ்வை மேற்கொள்வதுதானே இன்றைய நாகரிக வாழ்வு. கல்லாதவரையெல்லாம் கூட்டிக் கொடி பிடித்து ஆரவாரம் செய்பவர் கற்றவர்தாமே ! எனவேதான் எல்லாரும் இன்புற்றிருக்க நினைக்கும் கல்வியினை வேண்டும் என்கிறார் மாணிக்கவாசகர். மற்றவர் வாடத் தாம் வாழும் இக்காலக் கல்வி போன்ற ஒன்றினை ஒதுக்க வேண்டும், என்கிறார். அன்றைக்கும் நன்கு கற்ற அரசனும் அமைச்சர்களும் தாமே அ வ ரு க் கு க் கொடுமை இழைத்தனர். தாமின்புறுவது உலகின்புறக் காணும்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/61&oldid=684849" இலிருந்து மீள்விக்கப்பட்டது