பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

மக்சீம் கார்க்கி




அறியாது கொலையுண்ட
அனைவரும். உண்மை
நெறிகொள்ளும் பலத்தாலே
உயிர் பெற்று நிற்பார்!.

“அவனையும்கூட கேர்ச் நகர போலீசார் கொன்றுவிட்டார்கள். நான் அதைச் சொல்ல வரவில்லை. அவன் உண்மையை உணர்ந்தான் அந்த உண்மையை அவன் மக்களிடம் பரப்பினான். அவன் சொன்ன மாதிரி அந்த ‘அறியாது கொலையுண்ட’ பேர்களில் நீங்களும் ஒருவர்.”

“இப்பொழுதெல்லாம் நானே பேசிக் கொள்கிறேன். அதை நானே கேட்டுக் கொள்கிறேன். என்னை நானே நம்புவதுமில்லை. என் வாழ்நாள் முழுவதும் நான் ஒன்றே ஒன்றைப் பற்றித்தான் சிந்தித்தேன் ஒவ்வொரு நாளையும் யார் கண்ணிலும் படாமல் ஒதுக்கமாய் எப்படிக் கழிப்பது—யார் கையிலும் படாதபடி பார்த்துக்கொள்வது இதுதான் என் சிந்தனை, ஆனால் இப்போதோ என் மனதில் பிறரைப் பற்றிய சிந்தனைகளே நிரம்பி நிற்கின்றன. உங்களது கொள்கையை நான் முழுக்க முழுக்க அறியாது இருக்கலாம்; ஆனால், நீங்கள் அனைவரும் என் அன்புக்கு உரியவர்கள். உங்கள் அனைவருக்காவும் நான் வருந்துகிறேன். அனைவரின் நலத்தைப் பற்றியும் முக்கியமாக உங்கள் சுகத்தைப் பற்றி நான் மிகுந்த அக்கறை கொள்கிறேன். அந்திரியூஷா!” - அவன் அவள் பக்கம் வந்தான்.

“ரொம்ப நன்றி” என்றான் அவன். அவள் கரத்தை எடுத்து ஆர்வத்தோடு அழுத்திப் பிடித்தான். பிறகு விரைவாக விலகிச்சென்றுவிட்டான். அவள் தன் உணர்ச்சியினால் நிலை குலைந்துபோய், மிகவும் மெதுவாகவும் மௌனமாகவும் பண்ட பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்தாள். அப்போது அவள் மனம் தன் இயதயத்தின் அமைதி நிறைந்த ஆனந்தத்தையே எண்ணியெண்ணி புளகித்துக்கொண்டிருந்தது.

ஹஹோல் அறைக்குள் மேலும் கீழும் நடந்தவாறே அவளைப் பார்த்துப் பேசினான்.

“அம்மா! நீங்கள் வெஸோல்ஷிகோவிடம் சிறிது அன்பு காட்டுங்களேன். அவனது தந்தை—அந்த உதவாக்கரையான குடிகாரமட்டை—சிறையில் இருக்கிறான்; தன் தந்தையின் முகத்தை ஜன்னலோரமாகக் கண்டாலும் போதும் உடனே நிகலாய் தன் தந்தையைச் சரமாரியாகத் திட்ட ஆரம்பிக்கிறான். அது ரொம்ப மோசமான செய்கை, நிகலாய் இயற்கையில் கருணையுள்ளம் படைத்தவன். அவன் நாய்களை, எலிகளை, சகல மிருகங்களையும்