பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

மக்சீம் கார்க்கி


வீடும் கிடையாது. போலீஸ்காரர்கள் என்னைக் காவலில் வைத்திராவிட்டால், நான் சைபீரியாவுக்கே போயிருப்பேன். அங்கு கடத்தப்பட்டு, அங்கிருப்பவர்களை விடுதலை செய்வேன், ஓடிப்போய்விட உதவி செய்வேன்.....”

அவன் துயரப்படுகிறான் என்பதை அவளது உணர்ச்சிபூர்வமான இதயம் உணர்ந்தது. எனினும் அவனது வேதனை அவள் இதயத்தில் அனுதாப உணர்ச்சியை உண்டாக்கவில்லை.

“அப்படி நினைத்தால், நீ போய்விடுவதே நல்லது” என்று பதில் சொன்னாள். ஏதாவது பதில் சொல்லாதிருந்தால் அவனைத் துன்புறுத்தியதாகும் எனக் கருதியே இப்படிச் சொன்னாள்,

அந்திரேய் சமையலறையிலிருந்து வெளியே வந்தான்.

“நீ என்ன உபதேசிக்கிறாய்?’ என்று கேட்டுக்கொண்டே சிரித்தான்.

தாய் எழுந்து நடந்துகொண்டே, “நமக்கு ஏதாவது சாப்பாட்டுக்கு வழி பண்ணப் போகிறேன்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

ஹஹோலையே சிறிது நேரம் கூர்ந்து பார்த்துவிட்டு நிகலாய் திடீரென்று சொன்னான்.

‘எனக்குச் சில பேரைக் கண்டால் கொன்று தீர்க்கவேண்டும் போலிருக்கிறது.”

“ஓஹோ! அப்படியா? எதற்காக?” என்றான் ஹஹோல்.

“அவர்களை ஒழித்துக் கட்டத்தான்.’

நெட்டையாகவும் மெலிவாகவும் இருந்த ஹஹோல் அந்த அறையின் மத்தியில் வந்து நின்றுகொண்டு, பாதங்களை உயர்த்தித் தன் உடம்பை ஆட்டிக் கொண்டான்; நிகலாயைப் பார்த்தான். நிகலாயோ நாற்காலியில் அசையாமல் சிலைபோல அமர்ந்து புகை மண்டலத்தைப் பரப்பிக்கொண்டிருந்தான். அவனது முகம் திட்டுத் திட்டாகச் சிவந்து கனன்றது.

“நான் அந்தப் பயல்-இலாய் கர்போவின் மண்டையை உடைக்கிறேனா இல்லையா, பார்!”

“ஏன்?”

“அவன் ஒரு ஒற்றன்; கோள் சொல்லி! அவன்தான் என் அப்பனைக் கெடுத்தான். அவன் என் தந்தையைத் தன் கையாளாக மாற்றிவிட்டான்” என்று அமுங்கிப்போன குரோத பாவத்தோடு அந்திரேய் பார்த்துக்கொண்டே பேசினான்.