பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

245


அவனே இன்னும் முன்னேறினான். ஏதோ ஒரு மேகம் வானத்திலிருந்து தொப்பென்று விழுந்து அவர்களைக் கவிந்து சூழந்ததுபோல் திடீரென ஒரு சவ அமைதி நிலவியது.

கொடியைச் சுற்றி நின்றவர்கள் சுமார் இருபது பேருக்கு அதிகமில்லை, எனினும் அவர்கள் அனைவரும் அசையாது உறுதியோடு நின்றார்கள். தாய் பயத்தோடும் அவர்களிடம் ஏதோ சொல்லவேண்டும் என்று இனந்தெரியாத விருப்போடும் அவர்கள் பக்கமாக நெருங்கிச் சென்றாள்.

“லெப்டினெண்ட்! அந்தப் பயலிடமிருந்து அதைப் பிடுங்கு’ என்று கொடியைச் சுட்டிக்காட்டியவாறு சொன்னான் அந்தக் கிழட்டு நெட்டை மனிதன்.

அந்தக் குட்டி அதிகாரி உடனே பாவெலிடம் ஓடிப்போய். கொடியைப் பற்றிப் பிடுங்கினான்.

“கொடு இதை” என்று அவன் கீச்சிட்டுக் கத்தினான்.

“எடு கையை!” என்று உரத்த குரலில் சொன்னாள் பாவெல்.

கொடி வானில் பிரகாசத்தோடு நடுங்கியது. முன்னும் பின்னும் ஆடியது; பிறகு மீண்டும் நேராக நின்றது. அந்தக் குட்டி அதிகாரி தள்ளிப்போய் பின்னால் வந்து விழுந்தான். நிகலாய் தன் முஷ்டியை ஆட்டியவாறு தாயைக் கடந்து விரைந்து சென்றான்.

“இவர்களைக் கைது செய்” என்று தனது காலைப் பூமியில் ஓங்கியறைந்து கொண்டு சத்தமிட்டான். அந்தக் கிழட்டு நெட்டை மனிதன்.

பல சிப்பாய்கள் முன்னே ஓடினார்கள். அவர்களில் ஒருவன் துப்பாக்கியை மாற்றிப் பிடித்துச் சுழற்றி வீசினான் கொடி நடுங்கியது; முன்னால் சாய்ந்து விழுந்தது, சிப்பாய்களின் கூட்டத்தில் மறைந்து போய்விட்டது.

“ஹா!” என்று யாரோ ஒருவன் அசந்து போய்க் கத்தினான்.

தாய் தன் நெஞ்சுக்குள் புழுங்கித் தவித்த பயங்கர ஓலத்தை அடிபட்ட மிருகம் போல் அலறிக்கொண்டு வெளியிட்டார்கள். அந்தச் சிப்பாய்களுக்கு மத்தியிலிருந்து பாவெலின் தெளிவான குரல் ஒலித்தது: “வருகிறேன், அம்மா! போய் வருகிறேன். அன்பே......”

தாயின் மனத்தில் இரண்டு எண்ணங்கள் பளிச்சிட்டா: அவள் உயிரோடிருக்கிறான்! அவன் என்னை நினைவு கூர்ந்தாள்!”

‘போய் வருகிறேன், அம்மா!”

அவர்களைப் பார்ப்பதற்காகத் தாய் குதியங்காலை உயர்த்தி எட்டிப் பார்க்க முயன்றாள். சிப்பாய்களின் தலைக்கூட்டத்துக்கு