பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356

மக்சீம் கார்க்கி


“சரி, நான் போகிறேன்” என்றாள் சாஷா, அவள் ஒவ்வொருவரோடும் விரைவாகவும் மௌனமாகவும் கைகுலுக்கிவிட்டு, ஏதோ ஒருவிதமான அழுத்தந்திருத்தமான நடை போட்டுக்கொண்டு விறைப்பாக அங்கிருந்து வெளியே சென்றாள்.

அவள் போன பிறகு, சோபியா தன் கரங்களைத் தாயின் தோள்களின் மீது போட்டு, அவள் உட்கார்ந்திருந்த நாற்காலியை முன்னும் பின்னும் ஊஞ்சலாடினாள்.

“இந்த மாதிரி மருமகளை உங்களுக்குப் பிடிக்குமா, நீலவ்னா?” என்று கேட்டாள் அவள்.

“எனக்காக? நன்றாய்ச் சொன்னாய். அவர்கள் இருவரையும் ஒரு நாளைக்காவது ஒன்றாகப் பார்க்கின்ற காலம் வந்தால்!....” என்று கத்தினாள் தாய். அவளுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.

“ஆமாம், சிறு ஆனந்தம் என்றால் எல்லோருக்குமே நல்லதுதான்” என்று மெதுவாகச் சொன்னான் நிகலாய். “ஆனால் சிறு ஆனந்தத்தால் யாருமே திருப்தியடைவதில்லை. ஆனால் ஆனந்தம் பெருத்துவிட்டாலோ - அதன் தரமும் மலிவாகிவிடுகிறது.”

சோபியா பியானோ வாத்தியத்தருகே சென்றாள்; ஒரு சோக கீதத்தை இசைக்கத் தொடங்கினாள்.

12

மறுநாள் காலையில் ஆஸ்பத்திரியின் வெளிவாசலுக்கருகே சுமார் முப்பது நாற்பதுபேர் நின்றுகொண்டிருந்தார்கள்; தங்கள் தோழனின் சவப்பெட்டியைப் பெற்றுத் தூக்கிச் செல்வதற்காக அவர்கள் காத்து நின்றார்கள். அவர்களைச் சுற்றிலும் உளவாளிகள் திரிந்து கொண்டிருந்தார்கள். ஜனங்கள் பேசுகின்ற பேச்சையும், முகபாவங்களையும் நடவடிக்கைகளையும் அவர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். தெருவுக்கு அப்பால் எதிர்த்திசையில் ஒரு போலீஸ்படை இடைகளிலே ரிவால்வர்கள் சகிதம் நின்றுகொண்டிருந்தது. அந்த உளவாளிகளின் துணிச்சலைக் கண்டும்; போலீஸ்காரர்களின் ஏளனமான புன்னகையைக் கண்டும் ஜனங்களுக்கு ஆத்திரம் மூண்டுகொண்டு வந்தது; போலீஸ்காரர்கள் எந்த நிமிஷத்திலும் தம் சக்தியை வெளியிடத் தயாராய்த் துடிதுடித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் தங்களது ஆத்திரத்தைக் கேலியும் கிண்டலுமாகப் பேசி மறைக்க முயன்றார்கள். சிலர் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை ஏறிட்டுப் பார்த்துக்கொண்டிருக்க விரும்பாமல், தங்கள் தலைகளைத்-