பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

499


உணர்ச்சிகளை உருவாக்கி வெளியிடமுடியாத ஏலாத் தன்மையால் அந்த உணர்ச்சிகள் உள்ளுக்குள்ளேயே அழுந்திப்போயின. எனவே அவர்கள் சர்வ சாதாரணமான விஷயங்களைப்பற்றி, துணிமணி, உடம்பைப் பார்த்துக்கொள்ளுதல் முதலிய விஷயங்களைப் பற்றி என்னென்னவோ பேசிக்கொண்டார்கள்.

புகினின் மூத்த சகோதரன் தன் தம்பிக்கு எதையோ விளக்கிச் சொல்வதற்காக, கையை ஆட்டிக்கொண்டிருந்தான்:

“நியாயம்—இதுதான் வேண்டும். வேறொன்றுமில்லை!”

“நமது மைனாவைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்” என்று பதிலளித்தான் புகின்.

“பார்த்துக் கொள்கிறேன்.”

சிஸோவ் தன் மருமகனின் கையைப்பிடித்துச் சொன்னான்.

“நல்லது, பியோதர். அப்படியென்றால் நீ எங்களை விட்டுப் பிரிந்து செல்லப் போகிறாயா?.....”

பியோதர் தன் மாமனின் பக்கமாகக் குனிந்து அவன் காதில் ஏதோ ரகசியமாகச் சொல்லிவிட்டு, குறும்புத்தனமாகப் புன்னகை செய்தான், அங்கு காவல் நின்ற காவலாளியும் புன்னகை செய்தான். ஆனால் மறுகணமே அவன் தன் முகத்தை வக்கிரமாக வைத்துக்கொண்டு தொண்டையைக் கனைத்துச் சீர்படுத்திக்கொண்டான்.

மற்றப் பெண்கள் பேசியதுபோலவே தாயும் தன் மகனிடம் துணிமணிகளைப் பற்றியும், அவனது தேக சுகத்தைப்பற்றியுமே பேசினாள். எனினும் அவளது உள்ளத்தில் சாஷாவைப்பற்றியும் தன்னைப்பற்றியும் அவனைப்பற்றியும் ஆயிரமாயிரம் கேள்விகள் நிரம்பிப் புடைத்து விம்மிக்கொண்டிருந்தன. இதற்கெல்லாம் மேலாக, அவள் தன் மகன்மீது கொண்ட பாசவுணர்ச்சியால் ஏதோ ஒரு பாரவுணர்ச்சி நெஞ்சில் குடிபுகுந்தது. அவள் அவனை மகிழ்வித்து, அவனது இதயத்தைத் தன் இதயத்தால் தொட்டுவிட விரும்பினாள். ஏதோ நடக்கப்போகிறது என்றிருந்த பயபீதியுணர்ச்சி மறைந்து போய்விட்டது. அதற்குப் பதிலாக அந்த நீதிபதிகளைப் பற்றிய நினைவு எழும்போது ஒரு நடுக்க உணர்ச்சியும், அவளது மனத்தின் மூலையிலே சில இருண்ட எண்ணங்களுமே தோன்றிக்கொண்டிருந்தன. தன்னுள்ளே ஒரு புதிய பிரகாசம் பொருந்திய இன்ப உணர்ச்சி பிறப்பதை அவள் உணர்ந்தாள். அதை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை; எனவே அவள் குழம்பித் தவித்தாள். ஹஹோல் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு, தான் பாவெலிடம் காட்டும்