பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

திருக்குறள்


இவ்வுலகத்தின் தன்மை இரண்டு வகைப்படும். செல்வமுடையவராக இருப்பவர் ஒரு பகுதியினர். அறிவுடையோராக இருப்பவர் மற்றொரு பகுதியினர். அதற்குக் காரணம் அவரவர் செய்த ஊழே ஆகும். 374

5.நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.

செல்வத்தைத் திரட்ட ஒருவன் முயலும் போது போகூழ் இருப்பின், நல்லவையெல்லாம் கெட்டவைகளாம். ஆகூழ் இருப்பின், கெட்டவையெல்லாம் நல்லவைகளாம்.

நல்லவை-காலம், இடம், கருவி, தொழில் முதலியன நல்லவையாக இருத்தல். 375

6.பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.

விதியின் காரணமாகத் தமக்கு உரியன அல்லாதவற்றை வருந்திக் காப்பாற்றினாலும், அவை நில்லாமல் போய் விடும். விதியின் காரணமாகத் தமக்குரியவைகளைப் புறத்தே கொண்டு போய் எறிந்தாலும் அவை அகல மாட்டா.

பரியினும்-வருந்திக் காப்பினும்; பாலல்ல-விதியின் காரணமாகத் தமக்கு உரியன அல்லாதவை; உய்த்து-கொண்டு போய்; தம- தம்முடையவை. 376

7.வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

தெய்வத்தால் வகுக்கப்பட்டுள்ள வகைப்படியே எதையும் அனுபவிக்க முடியுமே யொழியக் கோடிக்கணக்தான பொருள்களை வருந்திச் சேர்த்தவருக்கும் அதற்கு மேலாக அனுபவிக்க முடியாது. 377

8.துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்.

வறுமையினால் அனுபவிக்கத் தக்க பொருளில்லாதவர்களும், ஊழினால் அவர்கள் அடைய வேண்டிய இன்பங்களை அனுபவித்தே தீர வேண்டும். அங்ஙனம் அனுபவிப்பதால், அவர்கள் துறவறத்தை மேற்கொள்ள விரும்பினாலும்