பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 99 இப்பால் 15. பிறனில் விழையாமை என்பது, காமபோக் வாஞ்சை மயக்கத்தினால் அயலாருடைய ஸ்திரிகளை விரும்பி ஆசைப்படாமல் இருக்கிறது. 11. பிறன் பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத் தறம்பொருள் கண்டார்கண் இல் என்பது பிறனுக்குரியளான பெண்சாதியை வாஞ்சித்துக்கொண்டிருக் கிற அறிவில்லாமை, உலகத்திலே தர்மசாஸ்திரங்களையும் நீதி நூல்களையும் கற்றறிந்தோர்களிடத்திலே இல்லை என்றவாறு | அ 142. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரில் பேதையார் இல் என்பது காம விகாரம் காரணமாகப் பாவத்தைச் செய்தவர்கள் எல்லாரிலேயும், பிறன் இல்லாளை விரும்பி அவன் வாசலிலே போய் நின்றவர்களைப்போல், அறிவில்லாதவர்கள் இல்லை என்றவாறு. காம வாஞ்சையினாலே வேசியரைச் சேருகிறவர்களுக்குத் தருமமும் பொருளும் இழக்கிறதல்லாமல் பயமில்லை; பிறன் இல்லாளை விரும்பினவர்கள், அறனும் பொருளும் இழந்து பயத்தினாலே தாங்கள் நினைத்தசுகமும் கெடுவர் என்பதாம். உ 143. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்தொழுகு வார் என்பது தம்மைச் சந்தேகப்படாமல் விசுவாசமாய் நம்பின வருடைய பெண் சாதியிடத்திலே பாவங்களைச் செய்ய விரும் பினவர், பிரா ணனுடனே யிருந்தாலும் செத்தவரோடே யொப்பர் என்றவாறு. அறம் பொருள் இன் பங்களாகிய பலனை அடையாத படி யினாலே செத்தாரோ டொப்பர் என்பதாம். [Fi_


=

1. காமத்தை நுகர்தல் 2. விருப்பம்