பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 1 II 183, புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும் என்பது பிறனைக் காணாத விடத்திலே இகழ்ந்து பேசிக் கண்ட பொழுது அவனுக்கு நல்லவனாகப் பொய்யுபசாரம் செய்து பிழைப்பதைப் பார்க்கிலும் சாகிறதே நல்ல தருமமாம் என்ற יש חוה) புறங்கூறாமலிருந்தவன் மறுபிறப்பிலே வெகு செல்வத்தை உடையவனாவான் என்றவாறு பிட 184. கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முனனின்று பின்னோக்காச் சொல் என்பது ஒருவன் எதிரே நின்று தயையில்லாமல் இகழ்ந்து பேசினா லும் அவனைக் காணத விடத்திலே இகழ்ந்து பேசல் ஆகாது என்றவாறு. அெ 185. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையால் காணப் படும் என்பது பிறரை இகழ்ந்து பேசுகிற ஒருவன் தருமத்தைச் சொன்னா லும் நல்ல மனத்தனாய்ச் சொல்பவனல்ல என்று அந்தச் சொற் களாலே அவன் குற்றம் அறியப்படும் என்றவாறு டு 186. பிறன் பழி கூறுவான் றன் பழி யுள்ளுந் திறன் தெரிந்து கூறப் படும் என்பது பிறன் பழியை எல்லாரும் அறியச் சொல்லுகிறவன் தன் பழியையும் ஆராய்ந்து தனக்குக் குற்றம் வராமல் பார்த்துக் கொண்டு சொல்ல வேண்டு மென்றவாறு. பிறர் பழியைச் சொன்னால் தன் பழியைப் பிறர் சொல்லி இகழப்படுவான் என்பதாம். அர்.